அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரியை ஏப்ரல் 3ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த ஒரு அறிவிப்பு உலகளாவிய ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களை அதிகளவில் பாதித்துள்ளது.
அமெரிக்காவில் உற்பத்தித் துறையை ஊக்குவித்து, அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சர்வதேச விநியோகச் சங்கிலியை நம்பி இயங்கும் அமெரிக்க வாகன தயாரிப்பாளர்களுக்கு இது பெரும் சவாலாக அமையும் என்பது தான் தற்போதைய பிரச்சனை.

அமெரிக்காவில் வர்த்தகம் செய்யும் பெரும்பாலான வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அங்கு தொழிற்சாலையை வைத்திருந்தாலும், பெரும் பகுதி ஆட்டோமொபைல் உதிரிபாகங்களை தங்களுடைய உலகளாவிய சப்ளை செயினில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் கார்களை தயாரித்து விற்கப்படுகிறது. இந்த முறையை உடைக்கும் விதமாக டிரம்ப்-ன் புதிய வரி விதிப்பு உள்ளது.
டிரம்ப்-ன் 25 சதவீத வரி விதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்களையும், வாகனங்களையும் அமெரிக்காவிலேயே தயாரிக்க வேண்டும். இல்லையெனில் வரி விதிப்புடன் பொருட்களை இறக்குமதி செய்து கார்களை தயாரிக்க வேண்டும். இதனால் கார்களின் விலை அதிகரிக்கும், புது கார் விற்பனை குறையும், பழைய கார் விற்பனை அமெரிக்காவில் அதிகரிக்கும்.
டிரம்ப் அறிவித்துள்ள 25 சதவீத வரி ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலை 12:01 மணிக்கு (EDT) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வாகன உதிரி பாகங்களுக்கான வரி, மே 3, 2025 க்குள் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரியின் மூலம் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என டிரம்ப் தலைமையிலான அரசு எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலகளாவிய சந்தையில் இருந்து உதிரி பாகங்களை நம்பி இயங்கும் அமெரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும்.
தற்போதைய நிலையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 25 சதவீத வரி உறுதி என்பதால், அமெரிக்காவுக்கு மொத்தமாகக் கட்டமைக்கப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்து விற்கும் சீனா நிறுவனங்களும், கனடா நிறுவனங்களுக்கும் இது பெரும் பாதிப்பாக அமையும். சந்தையின் கணிப்பின் படி உதிரி பாகங்களுக்கான 25 சதவீத வரி நடைமுறைப்படுத்தக் காலதாமதம் செய்யலாம். காரணம் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களின் நிலை.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, உலகளாவிய முன்னணி வாகன நிறுவனங்களின் பங்கு மதிப்புகளில் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கங்கள் சந்தித்துள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 3 சதவீதம் குறைந்தது, அதே நேரத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்கு விலை சற்று அதிகரித்தது.
ஜீப் மற்றும் கிறைஸ்லர் நிறுவனங்களின் தாய் நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் பங்கு விலை சுமார் 3.6 சதவீதம் குறைந்தது. ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா, நிசான் மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் பங்கு விலைகள் முறையே 3.7 சதவீதம், 3.2 சதவீதம் மற்றும் 3.1 சதவீதம் குறைந்தது. இதே போன்ற வீழ்ச்சி மிட்சுபிஷி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களிலும் காணப்பட்டது.
இந்த 25 சதவீத வரி கொள்கை, ஜப்பான் நாட்டு வாகனத் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது, ஜப்பான் நாட்டின் 142 பில்லியன் டாலர் ஆட்டோமொபைல் ஏற்றுமதி சந்தையில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வரிகள் முழுமையாக மக்களின் தலையில் விதிக்கப்பட்டால், இறக்குமதி செய்யப்படும் வாகனத்தின் சராசரி விலை 12,500 டாலர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

மருந்து நிறுவனங்களுக்கு செக்.. உலோக இறக்குமதிக்கும் லாக்.. மீண்டும் டிரம்ப் ஆடுபுலி ஆட்டம்?

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications