டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் ட்ரம்ப் கொண்டு வந்த ஒரு வரி முறைதான் ரெசிபுராக்கல் வரி முறை. ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமெரிக்கா, "லிபரேஷன் டே" என்ற பெயரில் இந்த புதிய வரி விதிப்பு முறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத பொதுவான வரி பொருந்தும். மேலும் வர்த்தக நடைமுறைகளை சீராக்கும் விதமாக எந்தெந்த நாடுகள் அமெரிக்காவில் கூடுதல் வரி விதிக்கிறதோ அந்தந்த நாடுகளுக்கெல்லாம் இந்த ரெசிபிப்ராக்கல் வரி முறை விதிக்கப்பட்டுள்ளன.
ரெசிபுராக்கல் வரிமுறை என்பது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கிறதோ? அதற்கேற்ப அமெரிக்காவும் வரிவிதிப்பு செயல்முறையை கையில் எடுக்கும்.

வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் பேசிய டிரம்ப் இந்த வரி விதிப்பு செயல்முறையை பொருளாதார சுதந்திரம் எனக் குறிப்பிட்டு பேசினார். வெளிநாட்டு உற்பத்தியாளர்களுடன் வரிவிதிப்பை சமன் செய்வதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்த இருப்பதாக உறுதியளித்தார். புதுப்பிக்கப்பட்ட இந்த வரி முறையில் அனைத்து இறக்குமதிகளுக்கும் 10 சதவீதம் நிலையான வரி விகிதம் பொருந்தும்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்து கொண்டு, அதிக விகிதங்களை விதிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவும் வரி விதிக்கும். இதில் கம்போடியா அதிகபட்சமாக 49 சதவீத வரிவிதிப்பை எதிர்கொள்ளவுள்ளது. அதைத் தொடர்ந்து வியட்நாம் 46 சதவீதமும், இலங்கை 44 சதவீதமும், சீனா 34 சதவீதமும், கூடுதலாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீத தள்ளுபடியுடன் இந்த ரெசிபிபுராக்கல் வரியை ட்ரம்ப் அறிமுகம் செய்து வைத்தார்.
சீனா: 34 சதவீதம்
ஐரோப்பியன் யூனியன்: 20 சதவீதம்
வியட்நாம்: 46 சதவீதம்
தைவான்: 32 சதவீதம்
ஜப்பான்: 24 சதவீதம்
இந்தியா: 26 சதவீதம்
தென் கொரியா: 25 சதவீதம்
தாய்லாந்து: 36 சதவீதம்
சுவிட்சர்லாந்து: 31 சதவீதம்
இந்தோனேசியா: 32 சதவீதம்
மலேசியா: 24 சதவீதம்
கம்போடியா: 49 சதவீதம்
யுனைடெட் கிங்டம்: 10 சதவீதம்
தென்னாப்பிரிக்கா: 30 சதவீதம்
பிரேசில்: 10 சதவீதம்
வங்காளதேசம்: 37 சதவீதம்
சிங்கப்பூர்: 10 சதவீதம்
இஸ்ரேல்: 17 சதவீதம்
பிலிப்பைன்ஸ்: 17 சதவீதம்
சிலி: 10 சதவீதம்
ஆஸ்திரேலியா: 10 சதவீதம்
பாகிஸ்தான்: 29 சதவீதம்
துருக்கி: 10 சதவீதம்
இலங்கை: 44 சதவீதம்
கொலம்பியா: 10 சதவீதம்
பெரு: 10 சதவீதம்
நிகரகுவா: 18 சதவீதம்
நோர்வே: 15 சதவீதம்
கோஸ்டாரிகா:10 சதவீதம்
ஜோர்டான்: 20 சதவீதம்
டொமினிகன் குடியரசு: 10 சதவீதம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: 10 சதவீதம்
நியூசிலாந்து: 10 சதவீதம்
அர்ஜென்டினா: 10 சதவீதம்
ஈக்வடார்: 10 சதவீதம்
குவாத்தமாலா: 10 சதவீதம்
ஹோண்டுராஸ்: 10 சதவீதம்
மடகாஸ்கர்: 47 சதவீதம்
மியான்மர் (பர்மா): 44 சதவீதம்
துனிசியா: 28 சதவீதம்
கஜகஸ்தான்: 27 சதவீதம்
செர்பியா: 37 சதவீதம்
எகிப்து: 10 சதவீதம்
சவுதி அரேபியா: 10 சதவீதம்
எல் சால்வடார்: 10 சதவீதம்
கோட் டி'ஐவோயர்: 21 சதவீதம்
லாவோஸ்: 48 சதவீதம்
போட்ஸ்வானா: 37 சதவீதம்
டிரினிடாட் மற்றும் டொபாகோ: 10 சதவீதம்
மொராக்கோ: 10 சதவீதம்
இந்த வரி விகிதங்களை அறிவித்த பின்னர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் சதவீதம் வரி விதித்தார். அதேநேரம் சீனாவிற்கு 8 சதவீதம் அதிகமாக 32 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. "மேக் அமெரிக்கா வெல்த்தி அகைன்" என்ற நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், கடுமையான வரி விதிப்பு செயல்முறையை இந்தியா பின்பற்றுவதாக கூறினார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 52 சதவீதம் வரை வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய நல்ல நண்பர். ஆனால் எங்களை சரியாக அவர் நடத்தவில்லை. எங்களிடம் 52 சதவீதம் வரி வசூல் செய்கின்றனர். நாங்கள் அவர்களிடம் இதுபோல எந்த ஒரு வரியையும் வசூலிக்கவில்லை என்று கூறினார்.


Click it and Unblock the Notifications