அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றிய நாளில் இருந்து தினமும் ஒரு அதிரடி என்ற வகையில் ஏதாவது ஒரு அறிவிப்பு அல்லது கருத்தை முன்வைத்து வருகிறார். இப்படி டிரம்ப் அறிவித்த ஒரு மசோதா தான் OBB மசோதா, இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்த மசோதாவுக்கு அந்நாட்டின் நாட்டு நாடாளுமன்றத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க செனட், OBB மசோதா தொடர்பாக 24 மணி நேர "வோட்-அ-ராமா" எனப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாவில் டிரம்ப் அரசின் விரிவான வரி மற்றும் செலவு திட்டங்கள் தொடர்பான முடிவுகள் அடங்கியது. இதை டிரம்ப் அரசு அதிகாரப்பூர்வமாக "ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் ஆக்ட்" என்று அழைக்கிறார்.

எலான் மஸ்க் முதல் பசுமை ஆர்வலர்கள், முதலீட்டாளர்கள் வரையில் இந்த மசோதாவை எதிர்த்து வந்தது மட்டும் அல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்கு அளிக்க லாபி செய்யப்பட்டு வந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் டிரம்ப்-ன் ரிப்பளிக் கட்சியினரையும் இந்த மசோதாவுக்கு எதிராக திருப்ப வேலைகள் நடந்தது.
இறுதியாக அமெரிக்க செனட்-ல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1, 2025) இரவு கிட்டத்தட்ட 17 மணிநேரம் நடந்த வாக்கெடுப்பு முடிந்து ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் ஆக்ட் அங்கீகரிக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 50:50 வாக்குகள் விழந்தது. இந்த நிலையில் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ் இறுதி முடிவைத் தீர்மானிக்கும் வாக்கை அளித்து, OBB மசோதாவை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கு வாக்கு செலுத்தினார்.
அமெரிக்க சென்ட்டில் ரிப்பளிக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் வேளையில் மூன்று ரிப்பளிக் கட்சி உறுப்பினர்கள் - மைனே மாநிலத்தைச் சேர்ந்த சூசன் காலின்ஸ், வட கரோலினாவைச் சேர்ந்த தாம் டில்லிஸ், மற்றும் கென்டக்கியைச் சேர்ந்த ராண்ட் பால் ஆகியோர் இந்த மசோதாக்கு எதிராக எதிர் கட்சியான டெமாக்ரட்டிக் உறுப்பினர்கள் உடன் இணைந்து இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.
அசோசியேட்டட் பிரஸ்ஸின் அறிக்கையின்படி, 17 மணிநேரமாக நடந்த வாக்கெடுப்பில் 50-50 என்ற சமநிலையில் முடிந்தது, இதனை தொடர்ந்து துணை அதிபர் ஜேடி வான்ஸ் வாக்கு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா முழுக்க முழுக்க அமெரிக்காவின் உள்நாட்டு கொள்கையை தீர்மாணிப்பது, இதனால் சர்வதேச வர்த்தகத்திற்கும், ரெசிப்ரோக்கல் வரிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
இந்த OBB மசோதா, டிரம்பின் இரண்டாவது ஆட்சி காலத்தின் முக்கிய சட்டமாகக் கருதப்படுகிறது, இதில் 2017-ஆம் ஆண்டு டிரம்ப கொண்டு வந்த வரிக் குறைப்புகளை நிரந்தரமாக்குவது, எல்லைப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைக்கு பல பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு, அமெரிக்க மக்களுக்கான மருத்துவ உதவி (Medicaid) மற்றும் உணவு உதவித் திட்டங்களில் (SNAP) நிதி குறைப்புகள் ஆகியவை அடங்கும். இதேவிட முக்கியமாக எலக்ட்ரிக் கார்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட உள்ளது.
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகத்தின் (CBO) மதிப்பீட்டின்படி, இந்த மசோதா அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் கடனை 3.3 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும். இந்த மசோதாவை எதிர்த்தவர்கள், குறிப்பாக Medicaid மற்றும் SNAP திட்டங்களில் மேற்கொள்ளப்படும் குறைப்புகள், ஏழை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டங்களை பாதிக்கும் என்று வாதிட்டனர்.
இந்த மசோதாவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய அம்சம், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணப் பரிமாற்றங்கள் (remittances) மீது விதிக்கப்படும் 1% வரி. அமெரிக்காவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பணம் அனுப்பும் தனிநபர்கள் இந்த வரியின் மூலம் பாதிக்கப்படலாம். இது வெளிநாடுகளில் பணிபுரிந்து தங்கள் தாயகத்திற்குப் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தோருக்கும், குறிப்பாக இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் வசிக்கும் பலருக்கும் கணிசமான நிதிச் சுமையை ஏற்படுத்தும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications