சீனாவின் கனவை சுக்குநூறாக உடைத்த டிரம்ப்.. கொந்தளிக்கும் ஜி ஜின்பிங்..!!

வெனிசுலா நாட்டில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலை வெறும் பொருளாதாரக் கண்ணோட்டத்திலிருந்து மட்டும் பார்க்க முடியாது, பல்வேறு புவிசார் அரசியல் பிரச்சனைகளை உள்ளடக்கி ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா வெறுமென போதை பொருள் கடத்தலுக்காக அந்நாட்டு அதிபரை கைது செய்து நாடு கடந்தவிவ்லை.

வெனிசுலாவில் இருக்கும் கச்சா எண்ணெய், எரிவாயு, தங்கம், வெள்ளி, அரிய உலோகம், பலதரப்பட்ட கனிவளங்களை கைப்பற்றும் நோக்கம் ஒருப்பக்கம் இருந்தாலும். லத்தின் அமெரிக்க நாடுகளில் சீனாவில் ஆதிக்கத்தையும், நட்புறவையும் சுக்கநூறாக உடைக்கவே டிரம்ப் முக்கியமாக இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கருத்து நிலவுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..? சீனாவுக்கு இதில் என்ன பிரச்சனை..?

சீனாவின் கனவை சுக்குநூறாக உடைத்த டிரம்ப்.. கொந்தளிக்கும் ஜி ஜின்பிங்..!!

வெனிசுலா நாட்டில் அமெரிக்காவின் தாக்குதல் மூலம் லத்தீன் அமெரிக்காவில் அதன் ஆதிக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், சீனாவின் நீண்டகால முயற்சிகள் சவாலுக்கு உள்ளாகியுள்ளன என்ற கருத்து நிலவி வருகிறது. இந்த நிலைமை உலக வர்த்தகம் மற்றும் அரசியல் உறவுகளில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என அல் ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லத்தீன் அமெரிக்கா - சீனா உறவு
கடந்த இரண்டு தசாப்தங்களாக சீனா, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் பொருளாதாரம் - வர்த்தக உறவுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. இதன் விளைவாக, இன்று தென் அமெரிக்காவின் முதன்மை வர்த்தக கூட்டணி நாடாக சீனா உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் நெருங்கிய நாடான மெக்சிகோவுக்கு இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் சீனா இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் லத்தின் அமெரிக்க நாடுகள் சீனாவை, அமெரிக்காவுக்கு மாற்றாக பார்க்க துவங்கியுள்ளது.

சீனாவுக்கு ஆதாயம்
உதாரணமாக, பிரேசில், அர்ஜென்டினா, உருகுவே போன்ற நாடுகளிலிருந்து சோயா பீன்ஸ் போன்ற விவசாயப் பொருட்கள் சீனாவின் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன, குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின்போது எவ்விதமான பாதிப்பையும் எதிர்கொள்ளாமல் இயங்கியது சீனா.

அதேபோல், சிலி, அர்ஜென்டினா, பொலிவியா ஆகிய நாடுகளிலிருந்து லித்தியம் கார்பனேட் போன்ற கனிமங்கள் சீனாவின் வேகமாக வளரும் எலக்ட்ரிக் வாகனத் தொழிலுக்கு முக்கிய அடித்தளமாக இருந்து வருகிறது. இந்த நாடுகளில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட கனிமம் சீனாவுக்கு அனுப்பி சுத்திகரிப்பு செய்து பேட்டரியாகவும், பிற பொருட்களாகவும் இந்த நாடுகளில் விற்கிறது சீனா.

கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் எலக்ட்ரிக் வாகன ஏற்றுமதி லத்தீன் அமெரிக்காவுக்கு 2023ஆம் ஆண்டில் மட்டும் 55 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவின் அதிகப்படியான உற்பத்தியை லத்தின் அமெரிக்காவுக்கு விற்பனை செய்வது மூலம் பெரும் லாபத்தை சீனாவும் சீன நிறுவனங்களும் பெற்று வருகிறது.

மேலும், மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்டும், நிராகரிக்கப்பட்ட ஹுவாவேயின் 5ஜி தொழில்நுட்பத்துக்கு லத்தின் அமெரிக்க நாடுகள் முக்கிய சந்தையாக விளங்குகிறது. தற்போது, பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஹுவாவேயின் 5ஜி ஸ்மார்ட்போன், டெலிகாம் டவர்கள், டெலிகாம் உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன.

சீனாவின் கனவை சுக்குநூறாக உடைத்த டிரம்ப்.. கொந்தளிக்கும் ஜி ஜின்பிங்..!!

சீனாவின் கடன் மற்றும் நிதியுதவி
இதேபோல் சீனா லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு அதிகளவிலான கடன்களை கொடுத்துள்ளது, அரசு நிறுவனங்களும், முக்கிய வளர்ச்சி திட்டங்களுக்கும் நிதியுதவி செய்துள்ளது. இப்படி சீனாவும் பல வகையில் தனது வர்த்தகத்தை காப்பாற்றிக்கொள்ள கடனை முதலீடாக பயன்படுத்தியுள்ளது. இதன் மூலம் கடந்த 20 வருடத்தில் படிப்படியாக மெக்சிகோ, வெனிசுலா, ஈக்வேடார், பிரேசில், பொலிவியா, அர்ஜென்டினா போன்ற நாடுகளுக்கு பல பில்லியன் டாலர் கடன்களும், சிறிய நாடுகளுக்கு 500 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை கடனாக சீனா கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் நெருடல்
லத்தீன் அமெரிக்கா அமெரிக்காவுக்கு மிக அருகில் உள்ளது, இப்படியிருக்கும் வேளையில் இப்பகுதியில் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கப அமெரிக்க அரசுக்கு பெரும் பிரச்சனையாக விளங்குகிறது. இப்பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் சீனா கொள்கையை ஏற்றுக்கொண்டு, தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று அங்கீகரித்துள்ளன. இருப்பினும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் ஏழு நாடுகள் இன்னும் தைவானுடன் தனிப்பட்ட உறவை கொண்டு சீனாவுடன் இணையாமல் உள்ளது.

கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், பல லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்க அழுத்தத்துக்கு இணங்கி சீனாவுடனான பொருளாதார உறவுகளை கட் செய்துக்கொண்டது. பிப்ரவரியில் பனாமா சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவிலிருந்து விலகியது. மார்ச் மாதத்தில், பனாமா கால்வாயின் உரிமையாளரான ஹாங்காங் நிறுவனம் பெரும்பாலான பங்குகளை அமெரிக்க நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு விற்றது. டிசம்பரில், மெக்சிகோ சீனப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கும் என்று அறிவித்தது, இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்தது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் National Security Strategy (NSS) அறிக்கையில், அமெரிக்கா-வெனிசுலா பதட்டங்களுடன் சேர்த்து சீனாவுக்கு கலவையான சிக்னலை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஒருபுறம், அமெரிக்கா சீனாவுடனான போட்டியை குறைத்து, மேற்கத்திய நாடுகளில் தனது ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளது. மறுபுறம், ஆசியாவிலும் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க தென் கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள அதன் ராணுவ தளங்கள் முழு செயல்பாட்டில் தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவின் கனவை சுக்குநூறாக உடைத்த டிரம்ப்.. கொந்தளிக்கும் ஜி ஜின்பிங்..!!

வெனிசுலா அரசு வீழ்ச்சியின் விளைவுகள்
வெனிசுலா-வை அமெரிக்கா கைப்பற்றியிருக்கும் வேளையில், சீனா வெனிசுலாவுக்கு எந்த அளவுக்கு உதவ முடியும் என்பதை அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் வெளிப்படையாக தெரிந்துக்கொள்ளும். இத்தகைய சூழல்நிலையில் பல லத்தீன் அமெரிக்க நாடுகள் சீனாவுடன் இணைவது சரியானதா என்பதை மறுபரிசீலனை செய்யத் தூண்டும்.

இது சீனாவின் உலகளாவிய ஆதிக்கத்தை பாதிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து சீனா வெளிவர வெறுமென கடனும், நிதியுதவியும் போதாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+