உலக நாடுகளில் எங்கு திரும்பினாலும் போர் பதற்றம் அதிகரித்திருக்கும் வேளையில், அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டு முக்கியமான எச்சரிக்கையை உலக மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் விடுத்துள்ளார்.
ரெசிஷன் வந்தாலே தாக்கு பிடிக்க முடியாத பல நாடுகள் இருக்கும் வேளையில், ஒரு நாட்டில் போர் ஏற்பட்டால் அது எந்த அளவுக்கு மக்களையும், பொருளாதாரத்தையும், வாழ்வியலையும் பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் துளசி கப்பார்டு வெளியிட்டுள்ள வீடியோ கவனிக்க வேண்டியதாக உள்ளது.

துளசி கப்பார்டு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ உலகம் இதுவரை இல்லாத அளவு அணு ஆயுதப் போர் ஆபத்தை நெருங்கி விட்டதாக எச்சரித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் பேசுகையில், சில சக்திவாய்ந்த அரசியல் தலைவர்கள் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளிடையே பதற்றத்தை தூண்டுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவை துளசி கப்பார்டு வெளியிட 2 முக்கிய காரணம் உள்ளது, 1. உக்ரைன்-ரஷ்ய மோதல் 1. ஹிரோஷிமா பயணம்.
அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்: துளசி கப்பார்டு, செவ்வாய்க்கிழமை X தளத்தில் வெளியிட்ட வீடியோவில், "இன்று அணு ஆயுதம் பெற்ற நாடுகளிடையே அரசியல் தலைவர்களும் மற்றும் போர் தூண்டுவோரும் பயத்தையும் பதற்றத்தையும் பொறுப்பற்ற முறையில் தூண்டுகின்றனர். இதனால் தற்போது உலக மக்கள் அணு அழிவின் எல்லையில் நிற்கின்றனர்." என அவர் கூறினார். இது உலகளாவிய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் வருந்தினார்.
உக்ரைன்-ரஷ்ய மோதலின் பாதிப்பு: துளசி கப்பார்டு தனது வீடியோவில் குறிப்பிட்ட நாடுகளின் பெயரை குறிப்பிடாமல் பேசினாலும், சமீபத்தில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் விமானக் படையை தாக்கியதை குறிக்கிறது இவரது பேச்சு. உக்ரைன் - ரஷ்யா மத்தியில் தற்போது அணு ஆயுத போர் அபாயத்தை உயர்த்தியுள்ளதாதவும் அவர் எச்சரித்தார்.
ஹிரோஷிமா பயணம்: கப்பார்டு சமீபத்தில் ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு 1945-ல் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் அழிந்த நகரின் மையப் பகுதியை பார்வையிட்டார். இந்த அனுபவம் அவரது பயத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். அணு ஆயுதங்களின் பயங்கரத்தை நேரடியாக உணர்ந்த அவர், உலகளாவில் இருக்கும் போர் பதற்றங்களை குறைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒரே அணு ஆயுதம் பல கோடி மக்களின் உயிரை சில நிமிடங்களில் அழித்துவிடும் என துளசி கப்பார்டு தனது வீடியோவில் கூறினார். இதை விளக்க, சான் பிரான்சிஸ்கோவில் அணு தாக்குதல் நிகழ்ந்தால் கோல்டன் கேட் பாலம் இடிந்து தரைமட்டமாகும் என்பதை விளக்கும் ஒரு காட்சியும் வீடியோவில் சேர்க்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications