ஃபுளோரிடா: திவால் நிலைக்கு சென்ற டப்பர்வேர் நிறுவனம் தங்களுடைய மொத்த தொழிலையும் 198 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டப்பர்வேர் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற ஒரு பிராண்டாக இருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் நாம் டப்பர்வேர் டப்பாக்களை காண முடியும். இப்படி மூலை முடுக்கெல்லாம் பொருட்களை விற்பனை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்த டப்பர்வேர் தற்போது திவாலாகி விட்டது.

தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு உடலுக்கு கேடு விளைவிக்கிறது என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதால் டப்பர்வேர் நிறுவனம் பெருமளவில் தன்னுடைய வருமானத்தை இழந்து விட்டது.
இதனால் அந்த நிறுவனம் திவால் நிலைக்கு சென்றுவிட்டது அமெரிக்காவின் ஃபுளோரிடாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய இந்த நிறுவனம் வணிக ரீதியாக பெருமளவில் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது. இதனால் கடந்த மாதம் இந்த நிறுவனம் திவால் ஆனதாக அறிவிப்பு வெளியிட்டது.
டப்பர்வேர் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் வேகமாக சரிவை கண்டது. இதனை அடுத்து இந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிதி நிறுவனங்கள் நெருக்கடி செய்ய தொடங்கியதால் நீதிமன்றத்தில் திவால் நடவடிக்கைகள் தொடர்பான விண்ணப்பம் போடப்பட்டது.
கடன்களை ஈடுகட்ட நிறுவனம் ஏலம் விடப்படும் என கூறப்பட்டது. ஆனால் டப்பர்வேர் நிறுவனம் ஏலம் விடுவதற்கு தயாராக இல்லை என்றும் 193 கோடி ரூபாய்க்கு நேரடியாக விற்பனை செய்ய தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. தற்போது டப்பர்வேர் நிறுவனம் 818 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் வைத்துள்ளது.
எனவே இதற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் நிறுவனத்தை ஏலத்தில் விடுத்து அந்த கடன் தொகையை வசூல் செய்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருந்தன. ஆனால் டப்பர்வேர் அதற்கு சம்மதிக்கவில்லை மாறாக நேரடியாக விற்பனைக்கு விடுவதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறு நிறுவனத்தை வாங்குபவர்கள் டப்பர்வேர் என்ற பிராண்டின் பெயரிலேயே தொடர்ந்து செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் வெளிநாடுகளில் தங்களுடைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக டப்பர்வேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சில கடன் வழங்கும் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து டப்பர்வேர் நிறுவனத்தை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் டப்பர்வேர் நிறுவன பொருட்களை டிஜிட்டல் தளங்கள் வாயிலாக விற்பனை செய்யவும் நிறுவனத்தின் கடன்களை மறுசீரமைக்கவும் இந்த கூட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஸ்டோன் ஹில் கேப்பிட்டல் மேனேஜ்மென்ட் பார்ட்னர்ஸ் மற்றும் ஆல் டைம் க்ளோபல் கேபிட்டல் ஆகிய கடன் வழங்குநர்கள் டப்பர்வேர் நிறுவனத்தை வாங்க இருப்பது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications