இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது.. துருக்கி போட்ட உத்தரவு!

காசா முதல் ஈரான் வரையிலான மத்திய கிழக்கு போரில் மைய புள்ளியாக இருக்கும் இஸ்ரேல் நாட்டின் பிரதமரான பெஞ்சமின் நெதன்யாகு மீது சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது துருக்கி. அமெரிக்க தலையிட்டும், டிரம்ப் நேரடியாக தலையிட்டும் இஸ்ரேல் காசா மற்றும் லெபனான் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது மொத்த மத்திய கிழக்கு பகுதியிலும் அமைதியை சீர்குலைத்து வருகிறது.

ஈரான் - அமெரிக்க மத்தியில் கையெழுத்திட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திலும் இஸ்ரேல் தனது தாக்குதலை மொத்தமாக நிறுத்த வேண்டும் என்ற கண்டிஷனையும் சேர்க்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது.. துருக்கி போட்ட உத்தரவு!

இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவிகளை வழங்க சென்ற புளோட்டிலா சமுக ஆர்வர்களை இஸ்ரேல் படைகள் முற்றுக்கையிட்டு தடுத்து நிறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக துருக்கி அறிவித்துள்ளது.

இந்த சர்வதேச கைது வாரண்ட் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை துருக்கியின் நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் வெள்ளிக்கிழமை தனது டிவிட்டர் பதிவு மூலம் தெரிவித்தார். நெதன்யாகு மீதான கைது வாரென்ட் என்பது புதியது கிடையாது.

இதற்கு முன்பு காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் மேற்கொண்ட கொடுரமான நடவடிக்கைகளுக்கு எதிராக, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் உயர்மட்ட அதிகாரிகள் மீது துருக்கி ஏற்கனவே இனப்படுகொலை குற்றச்சாட்டு தொடர்பாக கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

2023ல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - துருக்கி மத்தியிலான உறவு மோசமடைந்துள்ளதன் விளைவே இந்த கைது வாரென்ட். மேலும் இஸ்ரேல் நாடும், பெஞ்சமின் நெதன்யாகுவும் தொடர்ந்து பாலஸ்தீன ஆதரவு நாடுகளிடம் இருந்து தொடர்ந்து எதிர்ப்புகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகிறது.

புளோட்டிலா சமுக ஆர்வர்கள் உணவு, மருந்து உட்பட பல்வேறு உதவிகளுடன் கப்பலில் சென்ற போது இஸ்ரேல் படைகள் தடுத்த சம்பவம் பல முறை நடந்துள்ளது, ஏப்ரல் மாத இறுதியில் (22 கப்பலில் உதவிகள் சென்றது), மே மாத மத்தியில் (40 கப்பலில் உதவிகள்), 2025ல் செப்டம்பர், அக்போபர் மாதம் என பல முறை நடந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+