டிவிட்டர் நிறுவனத்தில் அடுத்தடுத்த ஊழியர்கள் ராஜினாமா. பேஸ்புக் உடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போனதா..?
டெல்லி: உலகின் முன்னணி சமுக வலைத்தளமான டிவிட்டர் நிறுவனத்தின் இந்திய கிளையில் 2 நாட்கள் முன்னதாக இதன் தலைவர் தனது சொந்த விருப்பம் மற்றும் குடும்பக் காரணங்களுக்காகப் பதவியை ராஜிநாமா செய்து டிவிட்டர் நிறுவனத்தை விட்டு முழுமையாக வெளியேறினார் ரிஷி ஜேட்லி.
தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி தனது ராஜிநாமாவை அறிவித்து நிர்வாகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். இதனால் பேஸ்புக் நிறுவனம் கொண்டாட்டத்தில் உள்ளது.
பர்மிந்தர் சிங்
ரிஷி ஜேட்லியின் ராஜிநாமா செய்தி வெளியாகி ஒரு வாரம் கூட முழுமையாக முடியாத நிலையில், தற்போது டிவிட்டர் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் நிர்வாக இயக்குநரான பர்மிந்தர் சிங் தனது ராஜிநாமாவை அறிவித்துள்ளார்.
3 வருட பணிக்காலம்
இவரும் தனது புதிய கோரிக்கோளை நிறைவேற்றுவதற்காக 3 வருடப் பணிக்குப் பின் டிவிட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகத் தனது டிவிட்டர் கணக்கில் அறிவித்துள்ளார்.
புதிய அதிகாரி
இதன் பின் டிவிட்டர் நிர்வாகம் தென்கிழக்கு ஆசியா, இந்தியா பகுதிகளுக்குப் புதிய நிர்வாக இயக்குநராக மாயா ஹரி அவர்களை நியமித்தார். இதனுடன் ஆசிய பசிபிக் பகுதி வர்த்தகத்தின் துணை தலைவரான அலீசா க்நாக்ஸ் மாயா கட்டுப்பாட்டில் இருப்பார் என அறிவித்துள்ளது.
ஆசிய நிறுவனம்
டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின் பர்மிந்த சிங், தான் ஆசிய பகுதியில் இருக்கும் ஒரு கன்டென்ட் நிறுவனத்திற்கு உதவ உள்ளதாகத் தெரிவித்தார்.
பணிநீக்கம்
சமீபத்தில் டிவிட்டர் நிறுவனம் தனது இலக்கு மற்றும் செலவுகளைக் குறைத்துக் கொண்டது. இதன் மூலம் உலகளாவிய தனது வர்த்தகத்தில் 9 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யதுள்ளது.
ஜாக் டோர்சே
டிவிட்டர் தற்போது நீண்ட கால வளர்ச்சியை நோக்கிய பயணிக்க உள்ளது இதனால் நிறுவனத்திலும் நிர்வாகத்திலும் சில முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என டிவிட்டர் நிறுவனத்தின் சீஇஓ ஜாக் டோர்சே தெரிவித்தார்.
ஊழியர்கள்
2015ஆம் ஆண்டில் ஜாக் டோர்சே முழுநேர சீஇஓ பதவியில் வந்த பின்னர் டிவிட்டர் நிறுவனத்தில் 300 ஊழியர்களை வெளியேறினார். ஜூன் 30, 2016 முடிவியில் டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 3,860 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
விற்பனைக்கு வந்த டிவிட்டர்
2016ஆம் ஆண்டில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் ஆப்பிள், கூகிள், வால்ட் டிஸ்னி மற்றும் சேல்ஸ்போர்ஸ் ஆகியவை தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது. இதில் முக்கியமாகச் சேல்ஸ்போர்ஸ் நிறுவனம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கப் பல கட்ட முயற்சிகளைச் செய்தது.
போட்டி
சந்தையில் பேஸ்புக் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றியைப் போல் எந்த ஒரு நிறுவனத்திற்கும் கிடைக்கவில்லை. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் அமெரிக்க அதிபர் ஒபாமா-வின் இரு முறை தொடர் வெற்றியில் பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனத்திற்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொன்னால் மிகையாகாது.
இந்தச் சக்திவாய்ந்த நிறுவனத்துடன் போட்டி போட முடியாமல் டிவிட்டர் மற்றும் கூகிள் பிளஸ் ஆகியவை போராடி வருகிறது.
ஆடிப்போன பேஸ்புக்
ஆனால் சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் நிறுவனமே ஆடிப்போகும் அளவிற்கு ஒரு நிறுவனம் இருந்தது. அதுதான் வாட்ஸ்அப்.
கடைசியில் அந்த நிறுவனத்தையும் வாங்கியது பேஸ்புக்.


Click it and Unblock the Notifications