நியூயார்க்: உலகின் முன்னணி வர்த்தகப் பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ், அமெரிக்காவில் 40 வயதுக்குள் உள்ள பணக்கார தொழில் முனைவோர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் எப்போதும் அமெரிக்கர்களும் பிற நாட்டவர்களும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இந்த வரும் 2 இந்தியர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
விவேக் ராமசாமி
ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய விவேக் ராமசாமி 50 கோடி டாலர் மதிப்புடன் 33 வது இடத்தில் உள்ளார். அல்சைமர் நோய்க்கான மருந்து தயாரிக்கும் எக்ஸோவன்ட் சைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆவார்.
அபூர்வா மேத்தா
அபூர்வா மேத்தா 40 கோடி டாலர் மதிப்புடன் 40 வது இடத்தில் உள்ளார். 29 வயதுடைய அபூர்வா மேத்தா இன்ஸ்டாகார்ட் என்ற நிறுவனத்தின் சீஇஓ ஆவார்.
மார்க் ஜூகர்பெர்க்
மேலும் இப்பட்டியலில் பேஸ்புக் நிறுவனத்தின் சீஇஓவான மார்க் ஜூக்கர்பெர்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மார்க் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 4,710 கோடி டாலர் என ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டஸ்டின் மோஸ்கோவிட்ஸ்
இவரைத் தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனரான டஸ்டின் மோஸ்கோவிட்ஸ் இரண்டாவது இடத்திலும் ஜான் கோம் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.16 வயதில் அமெரிக்காவிற்கு வந்த ஜான் கோம் வாட்ஸ்அப் செயலியை தொடங்கியவர் ஆவார்.
எலிசபெத் ஹோம்ஸ்
இப்பட்டியலில் எலிசபெத் ஹோம்ஸ் என்ற ஒரே பெண் மட்டும் இடம் பிடித்துள்ளார். இவர் 19 வயதிலேயே இரத்தம் சோதனை செய்யும் நிறுவனத்தைத் தொடங்கியவர் ஆவார்.
பால்மர் லக்கி
இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள மிகச் சிறிய வயதுடையவர் பால்மர் லக்கி. 21 வயதுடைய இவரது சொத்து மதிப்பு 70 கோடி டாலராகும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications