வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்க நாடுகள் இடையே வர்கத்தகப் பற்றாக்குறை 1.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2016ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் வல்லரசு நாடான அமெரிக்க மிகப்பெபரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வர்த்தகத்தின் மதிப்பு 47 பில்லியன் டாலராக இருந்த நிலையில், மார்ச் மாதம் 6.5 பில்லியன் டாலர் குறைந்து 40.4 பில்லியன் டாலர் என்ற அளவில் சரிந்துள்ளது.

மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் ஏற்றுமதி அளவு 1.5 பில்லியன் டாலர் குறைந்து 176.6 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, அதேபோல் இறக்குமதியின் அளவு 8.1 பில்லியன் டாலர் குறைந்து 217.1 பில்லியன் டாலர் என்ற அளவில் சரிவை சந்தித்துள்ளது.
இக்காலகட்டத்தில் மிகப்பெரிய ஏற்றுமதி வர்த்தகத்தைக் கொண்டு சீனா, அமெரிக்கா மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறை 26 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என அமெரிக்க வர்த்தகத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மார்ச் மாத காலகட்டத்தில் சீனா, பிரிட்டன் நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, கடந்த 7 மாதத்தில் மிகவும் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இது இந்நாட்டின் பொருளாதாரச் சரிவைக் குறைக்கும் ஒரு முக்கியக் காரணியாகும்.
ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டுமே அளித்துள்ளதால், பொருளாதார வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இந்நிலையில் ஜூன் மாதம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான முக்கியக் கூட்டத்தில் பெடரல் வங்கி வட்டி உயர்வு முடிவை நிச்சயமாக ஒத்திவைக்கும்.

ஏப்ரல் மாதத்தில் விவசாயம் அல்லாத துறையில் அமெரிக்காவில் 1,60,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலகட்டத்தில் இதன் சராசரி அளவு 2,00,000 என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதத்தின் வேலைவாய்ப்பு அறிக்கையின் படி அமெரிக்காவில் தற்போது வேலையின்மையின் அளவு 5.0 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் அடுத்தச் சில மாதங்களில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

டிரம்ப் நெனச்சது ஒன்னு, நடந்தது ஒன்னு.. ஜி ஜின்பிங் மாஸ்டர் மைண்ட்.. அசராமல் நிற்கும் சீனா..!!

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications