சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!

பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கி தற்போது வரை கிட்டதட்ட 5 மாதங்களாக ஈரானில் போர் பதற்றம் நீடிக்கிறது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது ஆபத்து என கூறி தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் முதலில் தாக்குதலை தொடங்கின. ஆனால் தற்போது இது ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் வந்து நிற்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இத்துடன் ஈரானில் பெரிய ஆட்சி மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமேனி மகன் மொஜ்தபா கமேனி தலைவரானார். இதனால் அமெரிக்கா தரப்புக்கு பெரும் அதிருப்தி, அதே வேளையில் ஈரானும் சம பலத்துடன் தாக்க தொடங்கியது. இந்த போர் ஜூன் மாதத்தில் சற்றே தணிந்த நிலையில் மீண்டும் இரண்டாம் கட்டமாக போர் தீவிரமடைந்துள்ளது.

சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!

அமைதி ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளுமே பரஸ்பரம் தாக்குதல் நடத்துகின்றன. இதனால் கச்சா எண்ணெய்க்காக வளைகுடா நாடுகளை சார்ந்திருக்கும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே தொடர்ந்து 13ஆஅவது நாளாக ஈரான் நாட்டின் பல்வேறு பகுதிகளை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் தீவிர ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம் ஈரானின் வடக்கு முதல் தெற்கு வரையிலான முக்கிய ராணுவ கட்டமைப்புகள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கிலான் மாகாணத்தில் ஈரானிய புரட்சிகர காவல் படையின் கடற்படை தலைமையகம் மீது குறி வைத்துள்ளது. அதே போல பண்டார் அன்சாலி துறைமுக நகரிலும் அமெரிக்க குண்டுகள் வீசப்பட்டன.

அமெரிக்காவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு ஈரானும் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. அரபு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தின.இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதலை விரிவுபடுத்த போவதாக எச்சரித்துள்ளார். அதே வேளையில் ராஜதந்திர முறையிலான பேச்சுவார்த்தைக்கும் கதவுகள் திறந்தே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சண்டையா? சமாதானமா? என்ன செய்ய போகிறார் டிரம்ப்? கன்னித்தீவு கதையாக நீளும் ஈரான் போர்..!!

இதற்கிடையே அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான பாதையை பாகிஸ்தான் ஆராய்ந்து வருகிறது. ஈரானிய உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.

ஈரான் போரை பொறுத்தவரை இரு தரப்புமே விடாப்பிடியாக நிற்கின்றன. ஒரு நாள் சமாதானம் ஆனால் அடுத்த நாளே சண்டைக்கு செல்கின்றன. இதனால் தான் இருதரப்புக்கும் இடையே ஒரு உடன்பாடே எட்டாமல் இருக்கிறது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை யார் கட்டுப்படுத்துவது என்பதில் தான் போட்டியே நீடிக்கிறது. இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் வரை ஈரான் போர் முடிவில்லாமல் கன்னித்தீவு கதையை போல நீண்டு கொண்டு தான் இருக்கும்.

அமெரிக்காவை இந்த போருக்காக ஏற்கனவே நிறைய செலவு செய்துவிட்டது. இதனால் போர் நீடிப்பது டிரம்புக்கே கூட சிக்கலை ஏற்படுத்தும். அதுமட்டுமில்லாமல் எந்த நாடும் இந்த போரில் அமெரிக்காவுக்கு துணை நின்று தாக்குதல் நடத்த தயாராக இல்லை. எனவே விரைவாக இதை முடிவுக்கு கொண்டு வருவது தான் உலக நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+