ஐக்கிய அமீரகத்தில் தங்கம் விலை சரிவு: வாங்குவதற்குச் சரியான நேரம் தானா?
துபாய்: அமெரிக்க டாலர் மதிப்பு நிலையாக உள்ளதால் ஐக்கிய அமீரகத்தில் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சரிந்துள்ளது. இதனைப் பார்த்த வல்லுனர்கள் இந்த நிலை மீண்டும் மாறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் முதல் தங்க விலை உயர்ந்துகொண்டே வந்த நிலையில் சென்ற வாரம் முதல் சற்று குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் தங்கம் விலையானது அவுன்ஸ்க்கு 0.2 சதவீதம் சரிந்து 1,329.16 டாலர் என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின் படி ஐக்கிய அமீரகத்தில் 24 காரட் தங்க 1 கிராம் 161 திராஹாம் ஆக உள்ளது. பிப்ரவரி மாதம் முதல் 2 திராஹாம் வரை விலை குறைந்துள்ளது.
தங்கம் நகை வாங்குபவர்களுக்கு 22 காரட் 151.25 திராஹம் என்றும், 21 காரட் தங்கம் 144.25 திராஹாம் என்றும், 18 காரட் தங்கள் 123.75 திராஹாம் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications