கோல்டன் விசா நீட்டிப்பு.. ஐக்கிய அரசு அரசு அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா அரசு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் தனது விசா கட்டுப்பாடுக்களை அதிகரிக்கத் துவங்கிய போது பல நாடுகளை இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. கனடா, அரபு நாடுகள் எனப் பல நாடுகள் விசா மற்றும் குடியுரிமை சட்டத்தில் அதிகப்படியான தளர்வுகளை அறிவிக்கப்பட்ட காரணத்தால் பல நாடுகள் உலகம் முழுவதிலும் இருந்து திறமைகளை ஈர்க்க துவங்கியது.

 

தற்போது டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வியை அடைந்த காரணத்தால் ஜோ பிடன் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது ஆட்சியில் விசா கட்டுப்பாடுகள் அதிகளவில் தளர்வு அளிக்கப்பட்டு என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிற நாடுகளும் வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க விசா மற்றும் குடியுரிமை சட்டங்களில் தளர்வுகளைத் தொடர்கிறது.

இந்த வகையில் ஐக்கிய அரசு நாடுகளின் கோல்டன் விசா முறை அடுத்த சில வருடங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

 கோல்டன் விசா

கோல்டன் விசா

ஐக்கிய அரபு நாடுகள் வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடப் பிரிவில் பட்டம் பெற்றவர்களையும், திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு 10 வருட ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்தக் கோல்டன் விசா.

விசா முறை

விசா முறை

பொதுவாக ஐக்கிய அரபு நாடுகளில் நிறுவனங்கள் உடனான கூட்டணியில் சில வருடங்கள் மட்டுமே தங்கி பணியாற்றக் கூடிய விசா வழங்குகிறது. இந்நிலையில் கடந்த 2 வருடத்தில் ஐக்கிய அரபு அரசு விசா முறையில் பல தளர்வுகளை அறிவித்து நீண்ட கால விசாவை வழங்குகிறது.

அதிலும் குறிப்பாக முதலீட்டாளர்கள், திறமையான பணியாளர்கள் மற்றும் முக்கியத் தொழில்நுட்பம் சார்ந்த மாணவர்களை ஈர்த்து வருகிறது.

துணை அதிபர்
 

துணை அதிபர்

இந்தக் கோல்டன் விசா கீழ் டாக்டர் பட்டம் பெற்றவர்கள், மருத்துவர்கள், கம்பியூட்டர் எலக்ட்ரானிக்ஸ், மென்பொருள் நிபுணர், மின்சாரத் துறை வல்லுனர், பயோ டெக்னாலஜி இன்ஜினியர்கள் ஆகிய துறையைச் சேர்ந்த திறமையான அதிகாரிகளுக்கு இந்தக் கோல்டன் விசா கீழ் முன்னுரிமை கொடுக்கப்படும் என ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபர் தெரிவித்துள்ளார்.

 முக்கியத் தொழில்நுட்பம்

முக்கியத் தொழில்நுட்பம்

இதேபோல் செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, epidemiology ஆகிய பிரிவில் பட்டம் பெற்ற அதிகாரிகளுக்கும், திறன் வாய்ந்தவர்களுக்கும் பெரிய அளவிலான தேவை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்கள்

மாணவர்கள்

மேலும் கோல்டன் விசா கீழ் உலகின் முன்னனி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 3.8 GPAக்கும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் கோல்டன் விசா கீழ் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UAE Golden Visa will Extend to important sector people

UAE Golden Visa will Extend to important sector people
Story first published: Sunday, November 15, 2020, 19:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X