துபாய்: 2018-ம் ஆண்டு வளைகுடா வாட் வரி ஆட்சி முறை அமலுக்கு வர இருப்பதால் வரி அமைப்பு போன்ற சிறப்புத் திறன் கொண்ட ஊழியர்களைப் பணிக்கு எடுப்பது அதிகரிக்கும் என்று நமக்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
வளைகுடா நாடுகள் எண்ணெய் மட்டும் இல்லாமல் பிற துறைகளில் இருந்து எப்படி வருவாய் ஈட்டுவது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதன் நோக்கமாக டிஜிட்டல் முறைக்கு மாறுவது மற்றும் வாட் வரி அறிமுகம் போன்றவை எல்லாம் அறிமுகம் ஆக உள்ள நிலையில் பின் வரும் திறன் இருந்தால் உங்களது அதிகச் சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
கணக்கியல் மற்றும் நிதி துறை
கணக்கியல் மற்றும் நிதி துறையில் 5 முதல் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் உள்ளவர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
வரி மேலாளர்கள்: $92,000 - $141,000
நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு இயக்குனர்கள்: $ 164,500 - $ 238,200
கடன் கட்டுப்பாட்டு நிறுவனங்கள்: $ 52,200 - $ 65,500
தொழில்நுட்பம்
வளைகுடா நாடுகளில் உள்ள அரசுத் துறைகள் மற்றும் பல தனியார் நிறுவனங்கள் தங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருவதால் தொழில்நுட்ப துறையில் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
பிராஜக்ட் / பிரோகிராம் மேலாளர்கள்: $ 98,100- $ 163,500
வணிக அமைப்புகள் ஆய்வாளர்கள்: $ 56,600 - $ 100,900
அப்ளிகேஷன் டெவலப்பர்கள்: $ 52,300 - $ 121,000
நிதி சேவைகள்
நிதி சேவைகள் துறையினைத் தேர்ந்து எடுத்துப் படிக்க இருப்பவர்களுக்குப் பயம் ஏதும் வேண்டாம். வரும் ஆண்டுகளில் இந்தத் துறையில் பண மோசடி வல்லுநர்கள் போன்ற பணிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகள் துபாயில் உருவாக உள்ளன.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
இணக்க அதிகாரிகள்: $ 58,900 - $ 91,600
பணம்-மோசடி வல்லுநர்கள்: $ 68,700 - $ 122,600
M & A அசோசியேட்ஸ்: $ 114,600 - $ 192,100
மனித வள மற்றும் நிர்வாகம்
ஊழியர் உறவுகள், வளங்களை ஒன்றிணைத்தல், திரை மற்றும் இடத் தொழிலாளர்கள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளுக்குத் துபாயில் அதிக வேலை வாய்ப்புகள் 2018-ம் ஆண்டுத் தொடர்ந்து கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மனித வள மற்றும் நிர்வாகம் ஊழியர்கள் தான் அடுத்தச் சில ஆண்டுகளுக்கு வளைகுடா நாடுகளின் வணிகத் துறைகளுக்கு மிகப் பெரிய தூண்களாக இருக்கப்போகின்றன.
எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
மனித வள தலைவர்: $ 114,400 - $ 128,500
மனித வள வணிகப் பங்குதாரர்: $ 78,700 - $ 81,700
நிர்வாக உதவியாளர்கள்: $ 53,000 - $ 58,900
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications