ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது மூத்த மகனான ஷேக் காலித்தை வளைகுடா நாட்டின் எண்ணெய் வளம் மிக்க தலைநகரான அபு தாபி நாட்டின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.
மேலும் அவரது சகோதரர்களை உயர் பதவிகளுக்கு நியமித்துள்ளதாகவும் அபுதாபி நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
ஷேக் முகமது தனது மற்ற சகோதரர்களான ஷேக் தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஹஸ்ஸா பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபி -யின் துணை ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
யார் இந்த ஷேக் கலீத்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் மூத்த மகனான ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஜனவரி 8, 1982 அன்று அபுதாபியில் பிறந்தார். ஷேக் காலித் ஷார்ஜாவின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திலும், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் 2014 இல் போர் ஆய்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
ஷேக் கலீத் கல்வி
அவர் அபுதாபி நிர்வாகக் குழுவின் உறுப்பினராகவும், அபுதாபி நிர்வாக அலுவலகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் மாநில எண்ணெய் நிறுவனமான ADNOC இன் நிர்வாக குழுவிலும் உள்ளார். ஆட்சி பொறுப்புக்கு வரும் முன்பே அரசு நிர்வாக பொறுப்பில் இருந்தவர் ஷேக் கலீத்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என்பது ஏழு எமிரேட்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு, இதில் அபுதாபி, அஜ்மான், துபாய், ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம் அல் குவைன். இதில் அபுதாபி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் தலைநகராக உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் தொகை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்களை காட்டிலும் பிற நாட்டு மக்கள் தான் அதிகம். 2015 ஆம் ஆண்டு தரவுகள் படி ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் இருக்கும் 7 நாடுகளில் மொத்த மக்கள் தொகையில்
38.2% இந்தியர்கள், 11.6% எமிராட்ஸ் நாட்டை பூர்விகமாக கொண்டவர்கள், 10.2% எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள், 9.5% பங்களாதேஷ், 9.4% பாகிஸ்தானியர், 6.1% பிலிப்பைன்ஸ், 12.8% பிற நாட்டவர்கள். இந்த எண்ணிக்கையில் பெரும் மாற்றம் தற்போது கட்டாயம் இருக்கும்.
எண்ணெய் வளம்
ஏழு எமிரேட்டுகளின் கூட்டமைப்பான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அபரிமிதமான எண்ணெய் வளத்தின் மூலம் செல்வ செழிப்புடன் விளங்கினாலும், தற்போது மாற்று வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசியல் தலைநகராக அபுதாபி விளங்கும் வேளையில், வணிக மற்றும் சுற்றுலா மையமாக துபாய் உள்ளது.
ஷேக் முகமது
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது மூத்த மகனான ஷேக் காலித்-ஐ தலைநகரான அபு தாபி நாட்டின் பட்டத்து இளவரசராக நியமித்துள்ளது மூலம் ஆட்சியில் கூடுதல் பலம் ஷேக் முகமது-க்கு கிடைத்துள்ளது.
ஆட்சிக்கு வந்த ஷேக் முகமது
ஷேக் முகமது, OPEC எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பை பல ஆண்டுகளாக தலைமையேற்று நடத்தி வந்த நிலையில் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஜனாதிபதியாகவும் அபுதாபி ஆட்சியாளராகவும் ஆனார். இதே வேளையில் தான் துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமுடன் இணைந்து தனது சகோதரர் ஷேக் மன்சூரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டனர்.
கத்தார் பிரதமர்
மார்ச் மாத துவக்கத்தில் கத்தார் நாட்டின் உயர்மட்ட அரசு அதிகாரியான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி செவ்வாய்க்கிழமை அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார். வளைகுடா அரபு நாடுகளின் அரசியல் பெரும்பாலும் ஆளும் அரச குடும்பத்துடன் மட்டுமே உள்ளது. இதனால் உயர் பதவிகள் அனைத்தும் அரசு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும், அரசு குடும்பத்தின் உறவினர்களுக்கும் மட்டுமே அளிக்கப்படும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications