அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் ஐக்கிய அரபு நாடுகள் 12வது இடம்..!
உலக முதலீட்டு அமைப்பின் அறிக்கையின் படி 2016ஆம் ஆண்டில் உலகநாடுகளில் சுமார் 44.486 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டைவிடவும் சற்று அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பட்டியலில் கடந்த வருடத்தை விட சுமார் 2.2 சதவீதம் அதிகமாக முதலீட்டை ஈர்த்து அன்னிய முதலீட்டை ஈர்க்கும் பட்டியலில் 12வது இடத்தை பெற்றுள்ளது.

இதன் மூலம் 2016ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 9 பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளை தாண்டி இப்படியலில் பஹ்ரைன், லெபனான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா 2016ஆம் ஆண்டு 5.12 பில்லியன் டாலர் வரையிலான அன்னிய முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டில் இதன் அளவு 7.572 பில்லியன் டாலர் இருந்தது.


Click it and Unblock the Notifications