சர்வதேச அளவில் ஆன்லைன் டாக்ஸி சேவை துறையில் முன்னணியாக திகழும் உபர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவான டிராவீஸ் கலானிக் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் பதவி மற்றும் நேரடி நிர்வாக பணியில் இருந்து வெளியேறினார்.
இதன் மூலம் உபர் நிறுவனம் தலைவர் இல்லாமல் இயங்கிய வந்த நிலையில், உபர் நிர்வாகம் சிஇஓ பதவிக்கு சிறந்த நபரை தேர்ந்தெடுக்கும் பணியை அதிரடியாக துவங்கியது.
ஹெச்பி, யாஹூ போன்ற பல முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் கூட உபர் நிறுவனத்தில் சேர ஆர்வம் காட்டினர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், தாரா-வை சிஇஓவாக நியமிக்க டிராவீஸ் உபர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த தாரா
இவரின் முழு பெயர் தாரா கோஷ்ரோஷாஹி இவர் எக்ஸ்பீடியா என்னும் மிகப்பெரிய டிராவல் நிறுவனத்தின் தலைவரா ஆவார்.
10 நாட்கள்
உபர் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு போட்டி போடும் நபர்களை ஏற்கனவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வெளியிட்டு இருந்த நிலையில், டிராவீஸ் மிகவும் ரகசியமாக வைத்திருந்த ஒரு பெயர் தான் தாரா.
கடந்த 10 நாட்களில் டிராவீஸ் சுமார் 12க்கும் அதிகமான நபர்களை நேர்முக தேர்வு நடத்தினார்.
கடைசி தேர்வுகள்
நேர்முக தேர்வுக்கு பின் கடந்த ஒரு வாரமாக உபர் நிர்வாகம் நடத்திய கூட்டத்தில், ஹெச்பி நிறுவனத்தின் தலைவரான மெவ் வித்மேன் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் கோ நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி இம்மெல்ட் ஆகியோர் கடைசி கட்டத்தை எட்டினர்.
இவர்களில் இருவரில் ஒருவரை தலைவராக நியமிக்க அனைத்து விதமான பணிகளையும் செய்துவந்தது உபர்.
திடீர் மாற்றம்
இத்தகைய கடைசிக்கட்டத்தில், உபர் நிறுவனத்தின் நிறுவனர்களான டிராவீஸ் கலானிக் மற்றும் இணை நிறுவனரான காரெட் கேம்ப் ஆகியோர் உபர் நிர்வாக குழுவிடம் எக்ஸிபீடியா நிறுவனத்தின் தலைவரா Dara Khosrowshahiவை நியமிக்க கோரினர்.
தாரா கோஷ்ரோஷாஹி
48 வயதாகும் தாரா, இது என்னுடைய வாழ்நாள் வாய்ப்பு என தெரிவித்துள்ளார்.
3 மாதம்
உபர் நிறுவனத்தின் சிஇஓ பதவியில் இருந்த கடந்த ஜூன் 20ஆம் தேதி டிராவீஸ் கலாநிக் ராஜினாமா செய்த நிலையில், 14 நிர்வாக உறுப்பினர்கள் கொண்ட குழு 12 வாரங்களுக்கு பின் தாரா-வை தேர்வு செய்துள்ளது.
69 பில்லியன் டாலர்
மார்ச் 2009 அதாவது வெறும் 8 வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட உபர் நிறுவனம் இன்று 633 நகரங்களில் ஆன்லைன் டாக்ஸி சேவை அளித்து வருகிறது.
சமீபத்தில் இந்தியாவில் உபர் ஈட்ஸ் என்ற ஆன்லைன் உணவு டெலிவரி சேவையையும் துவங்கியுள்ளது உபர். இன்றைய நிலையில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 69 பில்லியன் டாலர்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications