பெய்ஜிங்: ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனம் உபெர் இந்தியாவில் தனது சேவையை வெற்றிகரமாக துவங்கிய நிலையில் சீனாவில் 1பில்லிடன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் சீஇஓ டிராவீஸ் கலாநிக் கூறுகையில், கடந்த சில மாதங்களில் சீனாவில் உபெர் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவன மற்றும் சேவை விரிவாக்கத்திற்காக 2015ஆம் ஆண்டில் மட்டும் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என முன்னணி செய்தி நிறுவனத்திற்கு மின்னஞசல் மூலம் பதில் தெரிவித்தார்.
சீனாவில் உபெர் நிறுவனத்தின் மூலம் ஒரு நாளில் 10 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த மாதம் பயண எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

தற்போது சீனாவில் இந்நிறுவனம் 11 நகரங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த 1 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் இந்நிறுவனம் 50 நகரங்களில் இந்நிறுவனத்தின் சேவை விரிவாக்கம் செய்யப்படுவதாக திட்டமிட்டுள்ளது.
சீனாவில் உபெர் நிறுவனம் 2014ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் தனது சேவையை துவக்கியது குறிப்பிடதக்கது.


Click it and Unblock the Notifications