வயாமோ நிறுவனத்திற்கு 245 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தும் உபர்..!
இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல நாடுகளில் செயலி மூலமாக டாக்சி சேவை அளித்து வரும் உபர் மீது கூகுள் நிறுவனத்தின் ஒரு துணை பிரிவான வயாமோவின் செல்ப் டிரவிங் தொழில்நுட்பத்தினைத் திருடிப் பயன்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது அதனை ஒப்புக்கொண்ட உபர் அந்தத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த மாட்டோம் என்றும் அதனைத் திருடி பயன்படுத்தியதற்காக 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைக் கூகுள் நிறுவனத்திற்கு அளிப்பதாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட உபர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி தாரா கொஸ்ரோஷாஹி தனக்குத் தெரியாமல் ஊழியர்கள் இந்தத் திருட்டை செய்துள்ளதாகவும் அதற்குத் தான் உபர் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீடாகப் பங்குகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications