சான் பிரான்சிஸ்கோ: ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் நிறுவனத்தில், உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இன்றைய நிலையில் உபர் நிறுவனம் அமெரிக்கா மட்டும் அல்லாமல் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் பல தடைகளுக்குப்பின் வெற்றிகரமாகத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் கிளை நிறுவனமான உபர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 100 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய நிறுவனங்களும் ஒப்புக்கொண்டது.
இதுகுறித்த முடிவுகளை இருநிறுவனங்களும் அதிகராபூர்வமாக அறிவிக்கவில்லை.
தற்போது உபர் நிறுவனம் 50 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இப்புதிய முதலீட்டைக் கொண்டு நிறுவன சேவையைப் புதிய பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிராவீஸ் கலாநிக் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

