ஐயா டிரம்ப் சொன்னா நம்புங்க.. சத்தியமா அது நாங்க இல்லை.. நாங்க எந்த கப்பலையும் கைபற்ற முயற்சிக்கலா

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தெக்ரான் : ஆகாத பொண்டாட்டி கை தொட்டா குத்தம், கால் பட்டா குத்தம்கிற மாதிரி, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே, பிரச்சனை புகைந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்தின் கப்பல்களை வழி மறித்ததாகவும், கைபற்ற முயற்சித்தாகவும் ஈரான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

என்னய்ய இது கொடுமையா இருக்கு, வளைகுடா பகுதியில் எந்த பிரச்சனை என்றாலும் எங்கள தான் இழுப்பீங்களா என்றும் ஈரான் அதை மறுத்துள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவோ எப்படா வாய்ப்பு கிடைக்கும், ஈரானை எச்சரிக்கை செய்ய என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இங்கிலாந்து அரசு, இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பல்களை ஈரான் கைபற்ற, ஈரானின் ஐந்து ராணுவப் படகுகள் வழி மறித்ததாக கூறியுள்ளது.

இன்று Railway தனியார்மயம்.. நாளை ஏர் இந்தியா.. ஒரு நாள் மோடி நாட்டையும் விற்பார்? இன்று Railway தனியார்மயம்.. நாளை ஏர் இந்தியா.. ஒரு நாள் மோடி நாட்டையும் விற்பார்?

இங்கிலாந்து எண்ணெய் கப்பலை கைப்பற்ற ஈரான் முயற்சி?

இங்கிலாந்து எண்ணெய் கப்பலை கைப்பற்ற ஈரான் முயற்சி?

இங்கிலாந்து நாட்டின் எண்ணெய் கப்பலான பிரிட்டிஷ் ஹெரிட்டேஜ். இந்த கப்பல் பாரசீக வளைகுடா பகுதியில், ஹார்மூஜ் ஜலசந்தி வழியாக சென்று கொண்டிருக்கும் போது, அதை ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான ஐந்து படகுகள் கைப்பற்ற முயற்சி செய்தததாக, அமெரிக்காவின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளனவாம்.

முன்னரே பல கப்பல்கள் தாக்குதல்?

முன்னரே பல கப்பல்கள் தாக்குதல்?

இதற்கு முன்னரே பாரசீக வளைகுடா பகுதியில், கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்கியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில், இந்த செய்தி மேலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றம் நிலை வருகிறதாம்.

சொன்னா நம்புங்க சத்தியமா நாங்க அதை செய்யலா?

சொன்னா நம்புங்க சத்தியமா நாங்க அதை செய்யலா?

இந்த நிலையில் ஈரான் இது குறித்து கூறுகையில், இங்கிலாந்து எண்ணெய் கப்பல்களை, ஈரான் ராணுவ படகுகள் கைப்பற்ற முயற்சித்ததாக வெளியாகி உள்ள செய்தியை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஆமாங்க.. சத்தியமா நாங்க அதை செய்யவில்லை என்று அடித்து கூறுகிறதாம் ஈரான். இனி நடக்க போற கூத்தா பொறுத்திருந்து தான் பார்க்கணும் போல.

அமெரிக்காவின் நோக்கமே பதற்றத்தை அதிகப்படுத்துவதான்

அமெரிக்காவின் நோக்கமே பதற்றத்தை அதிகப்படுத்துவதான்

ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் இது குறித்து கூறுகையில், அவர்கள் (அமெரிக்கா) அப்படி சொல்வதின் நோக்கமே, மேலும் ஈரானின் பதற்றத்தை அதிகரிக்கச்செய்ய வேண்டும் என்பதுதான். இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை. அதோடு ஆதாரமற்றவை என குறிப்பிட்டுள்ளாராம். இதே போலவே ஈரானின் ராணுவமும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் படகுகள் எந்த வெளிநாட்டு கப்பல் மீதும் தாக்குதல் நடத்தவில்லை என்றும் அடித்துக் கூறியுள்ளாதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: iran trump ஈரான்
English summary

UK accused Iranian boats of impeding British tanker in the Gulf area

UK accused Iranian boats of impeding British tanker in the Gulf area
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X