பிரிட்டன் நாட்டின் இந்து மக்களின் ஆரோக்கியம், கல்வி தகுதி உச்சம்.. புதிய ஆய்வு..!

மக்கள் தொகை கணெக்கெடுப்புடன், தற்போது தன்னுடைய குடிமக்களைப் பற்றிய பல்வேறு விபரங்களைச் ஒவ்வொரு நாடும் சேகரிக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பிரிட்டன் (UK), தன்னுடைய குடிமக்களைப் பற்றி பல்வேறு விபரங்களைச் சேகரித்தது.

இந்த முக்கியமான தகவல் சேகரிப்பின் முடிவுகள் நமக்கு பல்வேறு ஆச்சர்யங்களையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளிக்கின்றன.

புள்ளி விபரங்களின் பகுப்பாய்வு

புள்ளி விபரங்களின் பகுப்பாய்வு

பிரிட்டன் தேசிய புள்ளி விபரங்களுக்கான அலுவலகம் (ONS) மார்ச் 2021 இல் நடத்தப்பட்ட ஆன்லைன் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பல்வேறு பகுப்பாய்வுகளை நடத்தி அதனுடைய விபரங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.

இந்த வாரம் 'வீடு, சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவற்றில் மதங்களில் தாக்கம்' என்ற தலைப்பில் அதனுடைய சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல்வேறு சுவாரஸ்யமான தரவுகள் பொதிந்துள்ளன.

மதத்தின் தாக்கம்

மதத்தின் தாக்கம்

2021 இல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்ற மக்கள் தொகை கணெக்கெடுப்பில் சுமார் 94 சதவீதம் பேர் இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளனர். 2021 ல் பிரிட்டன் மொத்த மக்கள் தொகை சுமார் 56 மில்லியன் ஆகும். இந்த கணெக்கெடுப்பில் சுமார் 24 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்கள் பங்கேற்றனர். இந்தத் தரவுகள் பல்வேறு நிலையங்களில் பகுப்பாய்வு செய்யப்பட்டு ONS ஆல் படிப்படியாக வெளியிடப்படுகின்றன.

மதம் வாரியான மக்கள் தொகை

மதம் வாரியான மக்கள் தொகை

இதற்கு முந்தைய வெளியீட்டின் படி, பிரிட்டன் நாட்டில் முதன்முறையாக கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை பாதிக்கும் கீழே சரிந்து விட்டது, அதாவது 50 சதவீதத்திற்கும் கீழ் சரிந்துள்ளது. அதே சமயத்தில் அந்த நாட்டில் உள்ள இந்து, முஸ்லீம், மற்றும் சீக்கியர்களின் மக்கள் தொகை சிறிது உயர்ந்துள்ளது.

இந்துக்கள்

இந்துக்கள்

பிரிட்டன் நாட்டில் உள்ள மக்களில், தன்னை இந்து என அடையாளப்படுத்திக் கொண்டவர்களில் சுமார் 87.8 சதவீத மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் தேசிய சராசரி சுமார் 82 சதவீதம் ஆகும். எனவே இந்து மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை தேசிய சராசரியை விட அதிகமாகவே உள்ளது. அதோடு மட்டுமல்ல, இந்து மக்களில் உடல் ஊனமுற்றோர் எண்ணிக்கை தேசிய சராசரியை விட மிகக் குறைவாகவே உள்ளது.

அங்குள்ள இந்து மக்களில் சுமார் 54.8 சதவீதம் பேர் நிலை 4 அல்லது அதற்கு மேல் உள்ளனர். இது தேசிய சராசரியை விட சுமார் 21 சதவீதம் அதிகமாகும்.

சீக்கியர்கள்

சீக்கியர்கள்

பிரிட்டன் நாட்டின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் வாழும் சீக்கியர்களில் பெரும்பாலானோர் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர் என தரவுகள் தெரிவிக்கின்றன. சீக்கியர்களில் சுமார் 77.7 சதவீதம் பேர் தங்களுடைய சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். இது தேசிய சராசரியை விட மிக அதிகமாகும்.

முஸ்லீம்கள்

முஸ்லீம்கள்

முஸ்லீம் மக்கள் மிக நெரிசலான வீடுகளில் வாழ்கின்றனர். இதன் அளவு தேசிய சராசரியை விட சுமார் நான்கு மடங்கு அதிகம். அதோடு மட்டுமல்ல, முஸ்லீம் இளைஞர்களிடம் (16 முதல் 64 வயது வரை) வேலை வாய்ப்பின்மை மிக அதிக அளவில் உள்ளது. முஸ்லீம் மதத்தில் வேலைக்குச் செல்வோரின் அளவு சுமார் 51.4 சதவீதம் என்கின்ற அளவிலேயே உள்ளது. இந்த வரிசையில் நாட்டின் தேசிய சராசரி 70.9 சதவீதம் என்கின்ற அளவில் உள்ளது.

 வயதான கிறிஸ்தவர்கள்

வயதான கிறிஸ்தவர்கள்

பிரிட்டன் வாழும் வயதானவர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் எனத் தரவுகள் தெரிவிக்கின்றது. எனவே இவர்களின் ஆரோக்கிய அளவீடும் மிக மோசமாகவே உள்ளது எனத் தரவுகள் தெரிவிக்கின்றது.

சொந்த வீடு

சொந்த வீடு

இங்கே குறிப்பிடப்படவேண்டிய மிக முக்கிய அம்சம் என்னவெனில், கிறிஸ்தவர்கள் சுமார் 36 சதவீதம் பேர் தங்களுடைய குடும்பங்களுக்கு சொந்தமாக உள்ள வீடுகளில் வசிக்கின்றனர். இது தேசிய சராசரியை விட சுமார் 8.9 சதவீதம் அதிகமாகும்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+