பிரிட்டன் அரசு, ரஷ்யாவின் மீது புதிய வர்த்தக மற்றும் பொருளாதார தடைகளை வெள்ளிக்கிழமை விதித்துள்ளது. SCO மாநாட்டிற்கு பிறகு மேற்கத்திய நாடுகள் கடும் பதற்றத்திற்கு உள்ளானது, டிரம்ப் சீனா மீது வரிகளை விதிக்க முடியத அளவுக்கு கைகளை கட்டுப்போடப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளை இந்தியா மீதும், ரஷ்யா மீது 100 சதவீதம் வரிகளை விதிக்க வலியுறுத்தினார் டிரம்ப்.
இதன் ஒருப்பகுதியாக அமெரிக்காவின் நட்பு நாடான பிரிட்டன், சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய தாக்குதலை மையாக கொண்டு ரஷ்யா மீது புதிய தடைகளை விதித்துள்ளது.

பிரிட்டன் வெளியிட்ட புதிய தடை உத்தரவில் ரஷ்ய எண்ணெய் கப்பல்கள், மற்றும் ரஷ்ய ஆயுதங்களை உற்பத்தி செய்ய பயன்படும் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், கெமிக்கல் மற்றும் வெடிபொருட்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை என பல தரப்பிட்ட பிரிவினரை டார்கெட் செய்து இப்புதிய தடைகளை விதித்துள்ளது.
உக்ரைனில் அதிகரித்து வரும் ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் புதன்கிழமை போலந்து மீது நேட்டோ வான்வெளி எல்லையை மீறியது போன்ற குற்றத்திற்காக பிரட்டன் இந்த புதிய தடைகளை விதித்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனின் புதிய தடைகள், ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை கொண்டு செல்லும் கப்பல்களை முதன்மையாக இலக்காகக் கொண்டு விதிக்கப்பட்டு உள்ளன. ரஷ்ய எண்ணெயை ஏற்றுமதி செய்ய பயன்படுத்தப்படும் சுமார் 70 கப்பல்களை குறிவைத்து, அவற்றின் செயல்பாடுகளை முடக்குவதற்காக இந்த தடைகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த கப்பல்கள், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு முக்கிய வருவாயை ஈட்டித்தரும் shadow fleet அமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த கப்பல்கள், மேற்கத்திய தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய்யை ஏற்றுமதி செய்ய உதவுகின்றன. இந்த தடைகள், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைக்கும்.

இதோடு ரஷ்யாவின் ஆயுத உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பு செய்யும் 30 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதும் பிரிட்டன் தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்கள், ரஷ்யாவின் இஸ்கந்தர் மற்றும் கேஎச்-101 போன்ற ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களுக்கு தேவையான எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், கெமிக்கல் மற்றும் வெடிபொருட்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ளன.
இதில், சீனாவைச் சேர்ந்த ஒரு எலகட்கரானிக்ஸ் நிறுவனமும், துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனமும் அடங்கும். இந்த தடைகள், ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி சங்கிலியை பலவீனப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications