அமெரிக்கா - உக்ரைன் போர் ஒருபக்கம் குறைந்திருக்கும் வேளையில் மறுமுனையில், ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த வாரம் ரஷ்ய ராணுவம் நடத்திய மாபெரும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் டிரோன்கள் மூலம் ரஷ்யாவின் மிக முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து தாக்கியுள்ளன.
சைபீரியாவில் அமைந்துள்ள ஓம்ஸ்க் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல், போர் தொடங்கி நான்கு ஆண்டுகளில் அப்பகுதியில் ஏற்பட்ட முதல் வெற்றிகரமான தாக்குதலாக பார்க்கப்படுகிறது. இந்த கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ரஷ்ய எல்லையில் இருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த தாக்குதல் உக்ரைனின் ராணுவ பலம் அதிகரித்துள்ளதை காட்டுவது மட்டும் அல்லாமல் ரஷ்யா ராணுவ கட்டமைப்புகள் இந்த டிரோன்களை கட்டுப்பாடுத்த முடியாமல் இருப்பதையும் காட்டுகிறது.

ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையம் ரஷ்யாவின் மிகப்பெரிய மற்றும் மதிப்புமிக்க சுத்திகரிப்பு ஆலையாக விளங்குகிறது. தினமும் 4,20,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இந்த சுத்திகரிப்பு நிலையம், ரஷ்யாவின் மொத்த சுத்திகரிப்பு திறனில் சுமார் 8 சதவீதத்தை பங்களிக்கிறது. மேலும் பெட்ரோல், டீசல் போன்ற உயர்தர எரிபொருள்களை உற்பத்தி செய்யும் முக்கிய தளங்கள் இங்கு உள்ளன.
உக்ரைன் ராணுவம் வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதலில் பல எண்ணெய் சுத்திகரிப்பு டவர்கள் சேதமடைந்து தீப்பிடித்துள்ளன. ரஷ்ய அதிகாரிகளும் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் ரஷ்யாவின் உள்நாட்டு எரிபொருள் சப்ளையை பாதிக்கும் அளவுக்கு பெரும் தாக்குதலாக விளங்குகிறது. அதேபோல் இந்த ஆலை மீதான தாக்குதல் மூலம் ஏற்றுமதி வருமானத்தையும் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையம் கச்சா எண்ணெயை உயர்தர எரிபொருள்களாக மாற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு இருக்கிறது. இந்த இயந்திரங்கள் சேதமடைந்தால், பழுதுபார்க்க பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். இது ரஷ்ய ராணுவத்திற்கான எரிபொருள் சப்ளையை கூட பாதிக்கும்.
உக்ரைன் தரப்பு இந்த தாக்குதலை தங்கள் நீண்ட தூர ட்ரோன் திறனை நிரூபிக்கும் வகையில் பார்க்கிறது. ஃபிளமிங்கோ க்ரூஸ் மிசைல்கள் மற்றும் லியூட்டி ட்ரோன்கள் போன்ற ஆயுதங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யாவின் ராணுவ தொழில்துறை திறனையும், எண்ணெய் உள்கட்டமைப்பையும் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications