உக்ரைனின் பொருளாதாரம் 2022ம் ஆண்டில் 29.1 சதவீதம் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் இந்தளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.
இது கடந்த 2021ம் ஆண்டில் உக்ரைனின் ஜிடிபியானது 3.4 சதவீதம் எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருந்தது.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், உக்ரைனில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைனில் பெரும் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவினால், உக்ரைனின் தொழில்துறை வளர்ச்சி, விவசாயம் என பலவும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. இதன் காரணமாக உக்ரைனின் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வருகின்றது.
அதிகாரப்பூர்வ தரவின் படி, உக்ரைனின் உள்கட்டமைப்பு வசதிகளானது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புதிய கட்டுமானமும் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியும் உக்ரைனுக்கு 411 பில்லியன் டாலர் அளவுக்கு உள்கட்டமைப்பு துறைக்கு நிதி தேவைப்படும்.
ரஷ்யாவின் இந்த தாக்குதலால் உக்ரைனின் 50 சதவீதம் மின்சார துறை உள்கட்டமைப்பு வசதிகளும் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.
இன்று வரையிலும் உக்ரைன் பிரச்சனை என்பது தொடர்ந்து கொண்டுள்ளது. இது மேற்கொண்டு தாக்கத்தினை எதிர்கொள்ளலாம். இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த பிரச்சனையானது, நாளுக்கு நாள் இன்னும் கொடூரமானதாக மாறி வருகின்றது எனலாம். உக்ரைனின் பல இடங்களில் ஆங்காங்கே மனித உடல்கள் திகிலடைய செய்த நிலையில், இது பெரும் பிரச்சனையை கிளப்பி வருகின்றது.
இதற்கிடையில் 16,000 உக்ரைன் குழந்தைகள் நாடு கடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இப்பிரச்சனைக்கு பயந்து லட்சக்கணக்கானேர் நாட்டை விட்டே வெளியேறியுள்ளனர்.மொத்தத்தில் உக்ரைனின் பொருளாதாரம் என்பது இன்னும் மிக மோசமான நிலையையே எட்டலாம்.
போரை எதிர்க்கொள்ள மருத்துவ உபகரணங்கள் உட்பட கூடுதல் மனிதாபிமான உதவிகளை செய்ய வேண்டும். நிதி உதவியும் செய்ய வேண்டும் என உக்ரைன் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் உக்ரைனின் பொருளாதார வளர்ச்சி என்பதை காட்டிலும், மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உக்ரைன் உள்ளது. இது மேற்கொண்டு அவர்களுக்கு முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications