ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின் உலகளவில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது குறிப்பாகக் கச்சா எண்ணெய், எரிவாயு போன்றவற்றில் அதிகப்படியான பாதிப்பு மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் பணவீக்கமும் மோசமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் வர்த்தகத்தை முடக்க வேண்டும் என்ற காரணமாகவும் உணவை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ள ரஷ்யா, இதன் மூலம் முக்கியமான கப்பல் வர்த்தகத்திற்குச் செய்த ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.
இதனால் உலக நாடுகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட உள்ளது, ரஷ்யாவுக்குத் தற்போது என்ன பிரச்சனை..?
தானிய ஏற்றுமதி
உலகளவில் தானியங்கள் ஏற்றுமதியில் உக்ரைன் முக்கியப் பங்கு வகிப்பது அனைவருக்கும் தெரியும், ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய காலகட்டத்தில் உக்ரைன் நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட போது உலக நாடுகளில் உணவு பொருட்கள் தட்டுப்பாடு உருவானது.
இந்தியா
இந்தக் காலகட்டத்தில் தான் இந்தியாவிடம் உலக நாடுகள் உணவு பொருட்கள் குறிப்பாகக் கோதுமைக்கு அதிகப்படியான ஆர்டர்களைக் குவித்தது. குறிப்பாகத் துருக்கி போன்ற பல நாடுகள் இந்தியாவிடம் கோதுமை உட்படப் பல உணவு பொருட்களை வாங்கத் தீர்மானித்தது.
ரஷ்யா - உக்ரைன்
உலகளவில் நிலவும் உணவு பற்றாக்குறை பிரச்சனையைச் சமாளிக்க ஜூலை மாதம் ரஷ்யா - உக்ரைன் மத்தியில் தானியங்களைக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்யத் துருக்கி மற்றும் ஐநா பஞ்சாயத்துச் செய்து அனுமதி பெற்றது.
டிரோன் அட்டாக்
அதாவது உக்ரைன் நாட்டின் தானியங்களை உலக நாடுகளுக்குக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்ய ஒப்புதல் அளித்தது ஒப்பந்தம் செய்தது, தற்போது கிரிமியா-வில் நடந்த டிரோன் அட்டாக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்து ஏற்றுமதியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.
90 லட்சம் டன் ஏற்றுமதி
ஜூலை மாதம் செய்த இந்த ஒப்பந்தம் இதுவரை 90 லட்சம் டன் அளவிலான உக்ரைன் தானியங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உணவு பற்றாக்குறையைத் தீர்த்துள்ளது, நவம்பர் 19 ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும்.
ஒப்பந்தம் முறிவு
ஆனால் சனிக்கிழமை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கருங்கடல் படையின் மூலம் செய்யப்பட்ட ட்ரோன் அட்டாக்கிற்கு உக்ரைன் ராணுவம் தான் காரணம் எனக் கூறி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைன் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
அமெரிக்கா
ரஷ்யா எடுத்துள்ள முடிவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இது முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று கூறினார், அதேவேளையில் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ரஷ்யா உணவை ஆயுதமாக்குகிறது என்று கூறினார்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மூலம் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்குப் பெரிய அளவிலான பஞ்சத்தை ஏற்படுத்தும் பாதிப்பை உருவாக்கியுள்ளது. மேலும் 10க்கும் அதிகமாகக் கப்பல்கள் ஏற்றுமதிக்குத் தயாராகி வருகிறது எனத் தெரிவித்தார்.
உலக நாடுகளுக்குப் பாதிப்பு
ரஷ்யாவின் இந்த முடிவு உக்ரைன் நாட்டை நேரடியாகப் பாதித்தாலும், உலக நாடுகளை மறைமுகமாகப் பெரிய அளவில் பாதிக்கும் குறிப்பாக உணவு பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அனைத்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளையும் இது கடுமையாகப் பாதிக்கும்.
இந்தியா
இந்தியாவிலும் இதன் பாதிப்பு எதிரொலிக்கும், உக்ரைன் ஏற்றுமதிகள் நிறுத்தப்பட்டால் உலக நாடுகள் இந்தியாவின் உதவியை நாடும். ஏற்கனவே இந்தியாவில் தானியங்களின் விலை மோசமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி அளவு அதிகமானால் தானியங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலை அதிகரிக்கும்.
மத்திய அரசு
இதைத் தடுக்க மத்திய அரசு விரைவில் மீண்டும் உணவு பொருட்கள் அல்லது தானியங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தைக் கண்காணிக்கவும், எந்த நாட்டுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது, இந்திய மக்களுக்குப் போதுமான இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்யும் பணிகளைத் துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications