அமெரிக்காவில் லட்சக்கணக்கான இளைஞர்கள் விருப்பமாக பயன்படுத்தும் ஒரு சமூக ஊடகமாக டிக் டாக் செயலி செயல் பட்டு வருகிறது . டிக்டாக் என்பது சீனாவை தலைமை இடமாகக் கொண்ட பைட் டான்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதள செயலி ஆகும்.
அமெரிக்க அரசாங்கம் பல ஆண்டுகளாகவே டிக் டாக் செயலி அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாகவும் நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் கூறி வருகிறது. இந்த சூழலில் தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் டிக் டாக் நிறுவனம் தொடர்ந்து அமெரிக்காவில் செயல்பட வேண்டும் என்றால் அமெரிக்க நிறுவனத்திடம் அதனை விற்று விட வேண்டும் அல்லது அமெரிக்க நிறுவனத்திற்கு ஒரு கணிசமான பங்கை ஒதுக்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வந்தார்.

இந்த நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால் அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு முழுவதுமாக தடை விதிக்கப்படும் என அவர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த சூழல் டிக் டாக் செயலிக்கான தடை விதிப்பதற்கான கெடுவை டிரம்ப் மூன்று முறை தள்ளி வைத்திருக்கிறார் . இதற்கிடையே டிக் டாக் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்க நிதித்துறை அமைச்சர் பெசண்ட் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் சீன அதிகாரிகளுடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டிக் டாக் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் , விரைவில் ஒப்பந்தம் எட்டப்படும் என்ற பாசிடிவான தகவலை வெளியிட்டார். மேட்ரிட்டில் நடைபெறக்கூடிய இந்த பேச்சுவார்த்தையில் டிக் டாக் நிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் முழுவதுமாக ஒப்படைத்துவிடுவது அல்லது பகுதி அளவு ஒப்படைப்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
சீன தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் முன் வைக்கப்படுவதாகவும் அது தொடர்பாக அதிபர் மற்றும் வர்த்தக துறையிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் அமெரிக் தேசிய பாதுகாப்பை தியாகம் செய்து இந்த செயலியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என அவர் தெரிவித்திருக்கிறார் .
கடந்த நான்கு மாதங்களில் நான்காவது முறையாக டிக் டாக் செயலி தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திற்கும் சீன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது . இதற்கிடையே டிக்டாக் செயலி தடைக்கு விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 17ஆம் தேதியுடன் முடிகிறது. தற்போது டிரம்ப் அரசு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் நிலையில் இருப்பதால் இந்த காலக்கெடுவதை மேலும் சில மாதங்கள் நீட்டிப்பார் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications