அமெரிக்காவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் ஊழியர்களில் கிட்டதட்ட பாதிபேரை பணி நீக்கம் செய்ய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தி, யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 36,000 ஊழியர்களுக்கு பணி நீக்கம் செய்ய கூறி அறிவிப்பினை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் விமானத் துறையில் எந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை அறிய முடிகிறது. கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் தாக்கத்தினால் விமானத் துறையானது பலமாக அடி வாங்கியுள்ள நிலையில், தற்போதைக்கு மீண்டு வருவதாகவும் தெரியவில்லை.
கொரோனா ஹாட் ஸ்பாட்
அதிலும் இன்று கொரோனாவின் ஹட் ஸ்பாட் ஆக திகழும் அமெரிக்காவில் எப்போது மீண்டும் வரும் என்பதே நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவின் சில மாகாணங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இனி பணி நீக்கம் குறையும்
இதன் காரணமாக அதன் உள்ளூர் விமான பயண சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வெளி நாட்டு விமான சேவையும் முடங்கியுள்ளது. இதுவே மிகப்பெரிய பணி நீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. ஆரம்பகாலத்தில் தற்போது செய்யப்படும் இந்த பணி நீக்கத்தினால், அக்டோபரில் பணி நீக்கங்களின் எண்ணிக்கையினை இது மட்டுப்படுத்துவதாகவும் யுனைடெட் அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
யார் யார் பணி நீக்கம்
இது குறித்து இந்த நிறுவனம் ஊழியர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில், 60 நாட்கள் எச்சரிக்கையுடன் இணங்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த மாஸ் பணி நீக்கத்தில் 15,000 விமான பணி பெண்களூம், 11,000 வாடிக்கையாளர் சேவை மற்றும் கேட் முகவர்களும், 5,500 பராமரிப்பு தொழிலாளர்களும், 2,250 விமானிகள் உள்பட பலரும் பணி நீக்கம் செய்ய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்கர்கள் எவ்வளவு பேர்?
இந்த அதிரடியான அறிவிப்பானது யுனைடெட் விமானத்தின் அமெரிக்கா ஊழியர்களை 45% கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதுமட்டும் அல்ல 1,300 நிர்வாக அதிகாரிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அக்டோபர் 1ல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், அதோடு சர்வதேச ஊழியர்களும் இதனுடன் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் 95,000 சர்வதேச பணியாளர்களைக் கொண்டுள்ளது.
பயணம் வீழ்ச்சி
கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் பாதி வரையில் விமான சேவையானது 95 சதவீதம் சரிந்துள்ளது. இதன் பின்னர் மெதுவாக அதிகரிக்க தொடங்கினா;லும் ஜூலை 4 வார இறுதியில் சற்று விமான பயணிகளின் எண்ணிக்கையானதுசற்று அதிகரித்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 70 சதவீதம் வீழ்ச்சியாகும்.
More From GoodReturns

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications