வாஷிங்டன், அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதனை அடுத்து பல்வேறு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தார். அந்த வரி விதிப்பு நடவடிக்கையை ஜூலை 9 வரை தள்ளி வைப்பதாக அறிவித்தார், தற்போது அதனை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை தள்ளி வைத்திருக்கிறார்.
பல்வேறு நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கின்றன. அந்த வகையில் ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 15 சதவீத இறக்குமதி வரி விதிக்கும் என தெரிவித்திருக்கிறார் .

ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதில் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பதிவு செய்திருக்கும் டிரம்ப் இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா தன்னுடைய பொருள்களை ஜப்பான் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் கார், லாரிகள், அரிசி மற்றும் குறிப்பிட்ட சில வேளாண் பொருட்களை ஜப்பானில் இனி விற்பனை செய்யலாம் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஜப்பான் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்றும் இதில் 90% அமெரிக்காவிற்கு தான் லாபம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டிரம்ப் "தற்போது தான் ஜப்பானுடன் ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறேன், இதுவரை கையெழுத்தானதிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம் என நான் கூறுவேன் , ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது, இதில் 90 சதவீதம் நமக்கு தான் லாபம் " என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக ஜப்பான் அரசாங்கத்துக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் ஆகஸ்ட் 1 முதல் ஜப்பான் பொருட்களுக்கு 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு 15 சதவீத வரி என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய ஆட்டோமொபைல் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது. ஜப்பானில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை வாகன உற்பத்திக்கான பொருட்கள் தான். அதற்கு 25 சதவீத வரி என்பது அதிகமாக இருந்தது தற்போது அது குறைய உள்ளது.
இது தவிர அலாஸ்காவில் இருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்காக ஜப்பானுடன் இணைந்து அமெரிக்கா ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்கும் என்ற தகவலையும் டிரம்ப் வெளியிட்டு இருக்கிறார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை உறுதி செய்துள்ளார். ஜப்பானின் வாகன உற்பத்தி துறைக்கு இது ஊக்கமளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications