ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தை விளைவிக்க கூடியவை எனக் கூறி கடந்த மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தின. குறிப்பாக அமெரிக்கா தன்னுடைய விமானப்படை மூலம் ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.
ஃபார்டோ, இஸ்ஃபஹான், நடான்ஸ் ஆகிய ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா திடீரென தன்னுடைய விமானப்படை விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்தியது. Operation Midnight Hammer என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று நிலையங்களும் பெரிய அளவில் சேதமடைந்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பும் இதனை உறுதிப்படுத்தினார். ஆனால் உண்மை வேறு எனக் கூறும் வகையில் ஒரு அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த என்பிசி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகள் ஒரு அணுசக்தி நிலையம் மட்டுமே சேதம் அடைந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறது. மற்ற இரண்டு அணுசக்தி நிலையங்களில் மிக லேசான அளவு சேதங்களே ஏற்பட்டுள்ளன என கூறி இருக்கிறது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி விட்டோம், ஈரானால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அணுசக்தி திட்டங்களை செயல்படுத்தவே முடியாது என கூறிவந்த நிலையில் அதற்கு மாறாக இந்த அறிக்கை வெளியாகி இருக்கிறது.
ஃபார்டோ தவிர மற்ற இரண்டு அணுசக்தி நிலையங்களிலும் அடுத்த சில மாதங்களிலேயே ஈரானால் தன்னுடைய அணுசக்தி செயல்பாடுகளை தொடங்க முடியும் என கூறியிருக்கிறது. இந்த செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளரான கெல்லி அமெரிக்க அதிபர் மற்றும் ராணுவ தலைமையகத்தை சேர்ந்த நிபுணர்கள் கூறியதைப் போலவே ஆபரேஷன் மிட் நைட் ஹேமர் மூலம் ஈரானின் அணுசக்தி திறன்கள் அனைத்துமே முழுவதுமாக அழிக்கப்பட்டன என்பதுதான் உண்மை என தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் செய்தி தொடர்பாளரான ஸீன் ஃபார் ஈரானுக்கு சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டன என்பது தான் உண்மை அதில் எந்த சந்தேகமும் இல்லை எனக் கூறியிருக்கிறார்.
முன்னதாக இந்த தாக்குதல் நடந்த ஒரு சில நாட்களிலேயே ஈரான் தன் வசம் வைத்திருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. தாக்குதல் நடந்த இடங்களில் அணுசக்தி அல்லது கதிர்வீச்ச வெளியான எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதால் ஈரான் முன்கூட்டியே இந்த யுரேனியத்தை பாதுகாத்து வைத்து விட்டதா அல்லது அமெரிக்கா நடத்திய தாக்குதல் அதனை அழிக்கும் வகையில் போதுமானதாக இல்லாமல் இருந்ததா என்ற கேள்வி எழுந்தது. இந்த சூழலில் தான் இப்படி ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!



Click it and Unblock the Notifications