ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா குரல் கொடுத்து வந்தது. இந்த சூழலில் திடீரென அமெரிக்க படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றன. இது பெரிய போருக்கு வித்திடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானுக்கு சொந்தமான நடான்ஸ் ,ஃபோர்டோ மற்றும் இர்ஃபஹான் (Natanz, Fordo and Isfahan ) ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இதனை பதிவு செய்திருக்கிறார். ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் தாக்குதலை நாங்கள் வெற்றிகரமாக முடித்து விட்டோம் என பதிவிட்டு இருக்கும் அவர், எங்களுடைய அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான் வெளியை விட்டு வெளியேறிவிட்டன என தெரிவித்திருக்கிறார். உலகில் வேறு எந்த ஒரு ராணுவத்தாலும் இதனை செய்திருக்க முடியாது எனக் கூறியிருக்கும் அவர் ஈரான் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும் இது அமைதிக்கான நேரம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது மேற்கத்திய நாடுகளுக்கு எப்போதுமே கவலை உண்டு. ஈரான் அணு ஆயுதங்களை மேம்படுத்தி வருவதாக அமெரிக்கா தொடர்ந்து சாடி வருகிறது. இந்நிலையில் ஈரான் அணுசக்தி திட்டங்களை குறி வைத்து இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது. இருவருக்கும் இடையிலான இந்த மோதலில் அமெரிக்கா தற்போது களமிறங்கி இருப்பது உலக அரசியலில் பெரும் பதற்றத்தையும் உண்டாக்கி இருக்கிறது.
முன்னதாக இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடன் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர் என அமெரிக்கா அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஈரான் தன்னுடைய அணுசக்தி நிலையங்களை மிகவும் ரகசியமான இடத்தில் வைத்திருந்த நிலையில் துல்லியமாக அதன் மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான இந்த தாக்குதலை அடுத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இது மிகச் சிறந்த ஒரு ராணுவ தாக்குதல் என குறிப்பிட்டிருந்தார். ஈரானின் முக்கியமான யுரேனியம் செறிவூட்டல் தளங்கள் முற்றிலுமாக அளிக்கப்பட்டன என அவர் அறிவித்திருக்கிறார். இதற்கிடையே ஈரானும் தங்களின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இது தொடர்பாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஈரானுக்கு ஆதரவாக இருக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதன் பின்விளைவுகளை கடுமையாக எதிர்கொள்ளப் போகிறார் என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் தற்போது அமைதி உடன்படிக்கைக்கு முன்வர வேண்டும் இல்லை என்றால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் அந்த தாக்குதல் மிக கடுமையானதாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இப்படியே தொடர வேண்டாம் என்பதே என்னுடைய விருப்பம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த எட்டு நாட்களில் இல்லாத அளவிலான பெரிய தாக்குதலையும் பெரிய பாதிப்பையும் ஈரான் சந்திக்க நேரிடும் எனவே அவர்கள் அமைதி உடன்படிக்கைக்கு வருவது நல்லது என தெரிவித்திருக்கிறார். அமெரிக்க ராணுவம் மேலும் சில இலக்குகளை ஈரானில் குறித்து வைத்திருப்பதாகவும் நாங்கள் நினைத்தால் சில நிமிடங்களில் அந்த இலக்குகளை அழிப்போம் என்றும் கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளின் கொடூரமான நாடு ஈரான் என கடுமையான வார்த்தைகளால் சாடி இருக்கும் டொனால்ட் டிரம்ப், எங்கள் நோக்கம் ஈரான் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதை தடுப்பதுதான் என மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதனிடையே ஈரானின் தலைமை மத குருவும் தலைவருமான அயதுல்லா கமேனி தான் கொல்லப்படலாம் என்ற அச்சத்தில் தனக்கு பிறகு யார் தலைமை குருவாக இருக்கலாம் என்பதை பரிந்துரைத்து விட்டு , பதுங்கு குழிகளில் சென்று தஞ்சம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
More From GoodReturns

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

மத்திய கிழக்கு போர் நிறுத்தம்..? டிரம்ப் பேச்சால் புது திருப்பம்..!!

Israel ரத்த வெள்ளம், Iran குறிவைத்த அணுசக்தி தளம்! முடங்கிய Iron Dome - அதிர்ச்சியில் நெதன்யாகு சொன்ன வார்த்தை

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

நாடு முழுவதும் உயர்த்தப்பட்டது பிரீமியம் பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!



Click it and Unblock the Notifications