அமெரிக்காவுக்கு பல்பு கொடுத்த ஈரான்.. புது திட்டம்.. புது வர்த்தகம்..!

ஈரான் நாட்டின் வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் அனைத்து வகையிலும் முடக்கி வரும் அமெரிக்காவுக்கு பல்பு கொடுத்துள்ளது. ஹார்முஸ் வழித்தடத்தையும், ஈரான் துறைமுகத்தையும் அமெரிக்கா தனது கடற்படை கொண்டு முடக்கியிருக்கும் வேளையில், ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வெளியேற முடியாத நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ஈரான் தற்போது சாலை வழியாகவும், பைப்லைன் வழியாகவும் அண்டை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காகக் கடந்த ஒரு மாதமாகச் சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும், எப்படியெல்லாம் இருநாடுகள் உடன் வர்த்தகம் செய்ய முடியும் என்பதை ஆலோசனை செய்து வருகிறது.

அமெரிக்காவுக்கு பல்பு கொடுத்த ஈரான்.. புது திட்டம்.. புது வர்த்தகம்..!

இந்த நிலையில் தஜிகிஸ்தானுக்கு தற்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் செய்யத் துவங்கியுள்ளது மூலம் ஈரானுக்கு புதிய வர்த்தக உறவும், நிதி ஆதாரமும் கிடைத்துள்ளது.

தஜிகிஸ்தான் நீண்ட காலமாக எரிபொருள் தேவைக்கு ரஷ்யாவை மட்டுமே பெரிய அளவில் சார்ந்திருந்த நிலையில், ஈரான் என்னும் பொக்கிஷம் கிடைத்துள்ளது.

Also Read

அமெரிக்க - ஈரான் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் ஈரான் அரசு தனது அண்டை நாடுகள் உடன் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் புதிய வரத்தக உறவை உருவாக்கவும், விரிவுபடுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாத இறுதியில் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி துவங்கியதாக தஜிகிஸ்தான் நாட்டின் எரிசக்தி மற்றும் நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது, ஈரானின் கச்சா எண்ணெய் மூலம் நாட்டின் மொத்த தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறதா என்பதையும் தெரிவிக்கவில்லை.

இதேவேளையில் அமெரிக்க அரசு ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகளை விதிக்கும் நிலையில் தஜிகிஸ்தான் இதை எப்படிக் கையாளுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது, இதேபோல் அமெரிக்கா - தஜிகிஸ்தான் மத்தியிலான வர்த்தகம் மிகவும் குறைவு என்பதால் இரண்டாம் நிலை தடைகள் மூலம் பெரும் பாதிப்பு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் தடை காரணமாக ஈரான் சாலை வழியாக வர்த்தகத்தை எல்லையைப் பகிர்ந்துள்ள சீனா, துருக்கி ஆகிய நாடுகள் உடன் அதிகரிக்க முடிவு செய்துள்ளது இதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருப்பதில் தஜிகிஸ்தானும் ஒன்று. குறிப்பாகத் துருக்கிக்குச் சாலை வழியாக வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும், சீனாவுடன் ரயில் வழியாகவும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேற்கொள்ள ஈரான் அரசு முயற்சி செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+