அமெரிக்காவின் மிகவும் பிரபலமான டாக்ஸி சேவை நிறுவனமான ஹெர்ட்ஸ் (Hertz) நிறுவனம் தனது மிகப்பெரிய சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், வர்த்தகத்தில் அடுத்தகட்டத்திற்குச் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளது.
ஹெர்ட்ஸ் (Hertz) தன் நிறுவனத்தில் இருக்கும் அனைத்து கார்களையும் எலக்ட்ரிக் கார்களாக மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ள நிலையில் இன்று சுமார் 1 லட்சம் டெஸ்லா கார்களை ஆர்டர் செய்துள்ளது.
இந்த அறிவிப்பால் டெஸ்லா நிறுவனம், எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் எலக்ட்ரிக் வாகன பிரிவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளது.
டெஸ்லா கார்
உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருக்கும் எலான் மஸ்க் தலைமை வகிக்கும் டெஸ்லா இன்று வரலாறு காணாத ஆர்டரை பெற்றுள்ளது. 2020ல் டெஸ்லா நிறுவனம் தனது உலகளாவிய வர்த்தகத்தில் 4,99,550 கார்களை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது 1 லட்சம் கார்களுக்கான ஆர்டர் என்பது ஒரு வருடத்தில் 3 மாத வர்த்தகம் ஒரு நாளில் கிடைத்துள்ளது.
1 லட்சம் கார் ஆர்டர்
ஹெர்ட்ஸ் (Hertz) நிறுவனம் தற்போது டெஸ்லா மாடல் 3 கார்களை ஆர்டர் செய்துள்ளது. இந்தக் கார்கள் 2022க்குள் டெலிவரி செய்யவும் டெஸ்லா ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டும் அல்லாமல் ஹெர்ட்ஸ் (Hertz) நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜர்களையும் வாங்க உள்ளதாகத் தெரிகிறது.
4 பில்லியன் டாலர்
இந்த ஆர்டரின் மொத்த விலை தெரியவில்லை என்றாலும், அமெரிக்காவில் டெஸ்லா மாடல் 3 காரின் விலை 40,000 டாலராக இருக்கும் நிலையில் 1,00,000 கார்களின் மொத்த விலை 4 பில்லியன் டாலராக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. பொதுவாகப் பெரிய ஆர்டர்களின் விலையில் சில சலுகை அளிக்கப்படும்.
Hertz நிறுவனம்
ஹெர்ட்ஸ் (Hertz) நிறுவனம் ஜூன் மாதம் தான் திவால் ஆவதில் இருந்து தப்பித்து முன்னாள் போர்டு நிறுவனத்தின் சிஇஓ-வான மார்க் பீல்ட்ஸ் இடைக்காலச் சீஇஓவாக அக்டோபர் நியமிக்கப்பட்டார். மார்க் பீல்ட்ஸ் தலைமையிலான ஹெர்ட்ஸ் நிர்வாகத்தின் முடிவு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
டெஸ்லா பங்கு விலை
1 லட்சம் கார்களுக்கான ஆர்டர் வெளியானதின் மூலம் டெஸ்லா பங்குகள் வெள்ளிக்கிழமை 905 டாலருக்கு முடிந்த நிலையில், அமெரிக்கச் சந்தையின் இன்று காலை வர்த்தகத்தில் ஒரு டெஸ்லா பங்கு விலை 970.84 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
மோர்கன் ஸ்டான்லி
இதேவேளையில் மோர்கன் ஸ்டான்லி காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு டெஸ்லா பங்குகள் சுமார் 30 சதவீதம் வரையில் உயர வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் மட்டும் டெஸ்லா பங்குகள் சுமார் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
எலான் மஸ்க் சொத்து மதிப்பு
இதன் மூலம் விரைவில் டெஸ்லா நிறுவன பங்குகள் 1000 டாலர் அளவீட்டைத் தாண்டுவது மட்டும் அல்லாமல் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலர் அளவீட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் விரைவில் எலான் மஸ்க் மொத்த சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலர் வரையில் உயரவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications