அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரியை விதித்தார். இதற்கு போட்டியாக சீனாவும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதித்தது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான இந்த வர்த்தக மோதல் சர்வதேச அளவில் ஒரு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தியது. சர்வதேச பொருளாதாரமும் ஸ்தம்பித்து போனது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு நாடுகளும் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கின்றன. இந்த 90 நாட்களுக்கும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 30 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை அமெரிக்காவுக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் மற்றும் அமெரிக்காவின் பெரும்பாலான பிராண்டுகளுக்கான பொருட்கள் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டிரம்ப்-ன் முதல் ஆட்சியில் அமெரிக்க நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடி காரணமாக சீனா +1 என்ற ஒரு கொள்கை உருவானது.
இந்த கொள்கையின் மூலம் சீனாவில் உற்பத்தி மையம் வைத்திருக்கும் அனைத்து அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிற்கு வெளியே ஒரு உற்பத்தி மையம் உருவாக்க வேண்டிய நிலை உருவானது. அந்த காலக்கட்டத்தில் தான் சீனாவில் இருந்து வெளியேறிய பல நிறுவனங்கள் (ஆப்பிள் உட்பட) இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா நாடுகளுக்கு முதலீடு செய்து புதிய உற்பத்தி தளத்தை உருவாக்க துவங்கியது.
திடீரென சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் 145% இறக்குமதி வரியை விதித்ததால் அமெரிக்காவை சேர்ந்த பல நிறுவனங்களும் சீனாவில் இருக்கும் ஆலைகளை மொத்தமாக கைகழுவிட்டு இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு மொத்தமாக மாற்றி விடலாம் என முடிவெடுத்திருந்தன.
ஏனெனில் இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி என்பது சீனாவுடன் ஒப்பிடும்போது பல மடங்கு குறைவாக இருந்தது. எனவே பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தி ஆலைகளை மற்ற ஆசிய நாடுகளுக்கு மாற்றுவதற்கு திட்டமிட்டன.
இந்த நிலையில் தான் தற்போது திடீரென சீனாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது . இதன் மூலம் சீன பொருட்களுக்கு 145% இறக்குமதி வரி என்ற முடிவு கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் டிரம்ப் தன்னுடைய இந்த முடிவை எத்தனை நாட்களுக்கு இப்படியே வைத்திருப்பார் என்பதை கணிக்க முடியவில்லை என அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களும் கருத்து தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் இருந்து தங்களுடைய முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றக்கூடிய முடிவை தற்போதைக்கு நிறுத்தி வைப்பதா இல்லை மாற்றிவிடலாமா என குழப்பத்தில் இருக்கின்றன. ஏற்கனவே ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவை விடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. இத்தகைய நிலையில் வரி விதிப்பில் வந்த மாற்றம் அனைத்து முக்கிய முடிவுகளும் தேக்கத்தில் உள்ளது.
இந்தியா, வியட்நாம் ,தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே அமெரிக்காவுடன் இறக்குமதி வரி தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் பன்னாட்டு நிறுவனங்கள் சீன உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளன.
டிரம்ப் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த ஒரு முடிவை வேண்டுமானாலும் எடுப்பார், குறிப்பாக சீனா மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளும் எடுப்பார் என்பதால் உடனடியாக சீனாவில் இருக்கும் உற்பத்தி மையங்களை வேறு நாடுகளுக்கு மாற்றாமல் படிப்படியாக மாற்றும் அணுகுமுறையை பன்னாட்டு நிறுவனங்கள் கையாள கூடும் என சொல்லப்படுகிறது.
அமெரிக்கா சீனா வர்த்தக மோதலால் தங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைப்பதாக எண்ணி இருந்த இந்தியா, வியட்நாம், தைவான், மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இது சற்றே பின்னடைவாக கருதப்படுகிறது. இருந்தாலும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உற்பத்திக்கு ஒரே நாட்டை சார்ந்திருக்க கூடாது என்ற பாடத்தை கற்றுக் கொண்டுவிட்டதால் படிப்படியாக இந்த நாடுகளை நோக்கி நகரும் என கணிக்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மரணம்..? இஸ்ரேல், டிரம்ப் பகிரங்க அறிவிப்பு..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications