உலக பொருளாதார அரங்கில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வர்த்தகப் போர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் விதித்த வரி உயர்வுக்கு பதிலடியாக, அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு சீனா வரி விதித்துள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த வரி விதிப்பு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவு மோசமடைந்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் தனது வரி விதிப்பை 3வது முறையாக ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டாலும், சீனா தனது வரி விதிப்பை திட்டமிட்டப்படி இன்று முதல் செயல்படுத்த உள்ளது. இதேவேளையில் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அமெரிக்க அரசு விதிக்கும் வரி விதிப்பில் இந்தியா உள்ளதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், சீனா, கனடா, மெக்சிகோ உள்ளிட்ட முக்கிய வர்த்தக நாடுகளுக்கு எதிராக பல்வேறு வரிகளை விதிக்க உள்ளதாக அறிவித்த அவர் தற்போது உலகளவில் தனது அனைத்து வர்த்தக கூட்டாளி நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த நாட்டின் மீது எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
அமெரிக்க அரசு சட்டவிரோத குடியேற்றம் மற்றும் அபாயகரமான போதைப்பொருளான ஃபென்டானில் கடத்தலை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் என அமெரிக்க நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றசாட்டுகளை சீனா முற்றிலும் மறுத்துள்ளது.
முதலில், அமெரிக்க அரசு பிப்ரவரி மாத தொடக்கத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 10 சதவீத வரி விதிக்கப்பட்டது. கடந்த வாரம் இது 20 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது, இதனால் அமெரிக்காகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரியை விதித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி உயர்வு சர்வதேச வர்த்தக கட்டமைப்பை சீர்குலைப்பதாக சீன நிதி அமைச்சகம் கடுமையாக குற்றம் சாட்டியதுடன் அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையை சீனா அறிவித்தது.
அதன்படி, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி, கோதுமை, சோளம் மற்றும் பருத்தி போன்ற பொருட்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சோயாபீன்ஸ், சோர்கம், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, கடல் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மார்ச் 10-ம் தேதிக்கு முன்னர் கப்பலில் அனுப்பப்பட்டு, ஏப்ரல் 12-ம் தேதிக்குள் சீனா வந்து சேரும் பொருட்களுக்கு இந்த வரி விதிப்பு பொருந்தாது. இது சில ஏற்றுமதியாளர்களுக்கு தற்காலிக நிவாரணத்தை அளிக்கிறது.
அமெரிக்கா சீனா மத்தியில் உருவாகியுள்ள வர்த்தக போர் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தெரியவில்லை, ஆயினும் ஆரம்ப தரவுகள் ஏற்றுமதி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை சுட்டிக்காட்டுகின்றன.
தற்போது கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2025-ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி 2.3 சதவீதம் மட்டுமே. இது எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவு மற்றும் டிசம்பர் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 10.7 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது இது பெரும் சரிவாகும்.
More From GoodReturns

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications