உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தின் நுகர்வோர் பணவீக்கம் எல்லோரும் பயந்ததைப் போலவே பெரிய அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாகக் கணிக்கப்பட்ட அளவீட்டை விடவும் அதிகரித்துள்ளதால் அமெரிக்க அரசும், அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ்-ம் சோகத்தில் உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது வட்டி விகிதத்தை உயர்த்தி நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.
நுகர்வோர் பணவீக்கம்
அமெரிக்காவில் அக்டோபர் மாத நுகர்வோர் பணவீக்க தரவுகள் வெளியாகியுள்ள நிலையில், 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த மாதத்தை விடவும் 0.6 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 0.9 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
1990ஆம் ஆண்டுக்குப் பின்
அமெரிக்கச் சந்தையில் 1990ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் 6.2 சதவீதம் என்ற உச்சத்தைத் தொட்டு உள்ளது. இது தொடர்ந்து உயர்ந்தால் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Core Inflation அளவீடு
அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க மிக முக்கியமான காரணமாக இருந்தது எரிபொருள் விலையில் ஏற்பட்ட உயர்வு தான், எரிபொருள் உயர்வை ஒதுக்கிவிட்டு Core Inflation அளவீடும் கணிக்கப்பட்ட அளவீட்டை விடவும் அதிகரித்துள்ளது. மேலும் அதிகப்படியான ரியல் எஸ்டேட் விலையும் தற்போது நுகர்வோர் பணவீக்க உயர்வுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
அக்டோபர் மாத நுகர்வோர் பணவீக்கம் தரவுகள் வெளியான உடனேயே அமெரிக்கப் பங்குச்சந்தையில் டெக் நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு, வங்கி பங்குகளில் அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது. காரணம் பெடரல் ரிசர்வ் மற்றும் அமெரிக்க அரசும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் அதிகம் நன்மை அடைவது வங்கிகள் தான்.
கச்சா எண்ணெய்
இதற்கிடையில் அமெரிக்கா அரசு எரிபொருள் விலையைக் குறைக்கச் சேமிப்பில் கிடங்கில் இருக்கும் எண்ணெய்-ஐ அதிகளவில் சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதனால் WTI கச்சா எண்ணெய் விலை 0.14 சதவீதம் சரிந்து 81.23 டாலருக்கு குறைந்துள்ளது.
சீனா-வை தொடர்ந்து அமெரிக்கா
அக்டோபர் மாத நுகர்வோர் பணவீக்கம் தரவுகள் மூலம் அந்நாட்டு முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் இந்திய மற்றும் ஆசியச் சந்தையில் அதிகமாக எதிரொலிக்கிறது. மேலும் நேற்று சீனாவின் தொழிற்துறை பணவீக்கம் உயர்ந்ததை அடுத்துத் தற்போது அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications