டிரம்ப்-ன் தில்லாங்கடி வேலை.. போரை வைத்து பிஸ்னஸ் செய்யும் அமெரிக்கா.. 30 நிமிடம் முன்?

உலகம் முழுவதும் அரசியலும், நிதிச் சந்தைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் இன்றைய சூழலில், அமெரிக்கா அரசு பல மாதங்களாக செய்து வந்த தில்லாங்கடி வேலையில் தற்போது கையும்களவுமாக மாட்டிக்கொண்டது.

ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரான் மீது அமெரிக்க ராணுவ செய்த தாக்குதலை, அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த பிறகு திட்டமிட்டு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், "சந்தை சரிவையும், கச்சா எண்ணெய் விலை அதிர்வையும் தவிர்க்க பென்டகன் இத்தகையை நடவடிக்கை எடுத்துள்ளதா?" என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிரம்ப்-ன் தில்லாங்கடி வேலை.. போரை வைத்து பிஸ்னஸ் செய்யும் அமெரிக்கா.. 30 நிமிடம் முன்?

ஈரான் போர் துவங்கியதில் இருந்து டிரம்ப் வெளியிடும் கருத்தும், பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீடுகளும், மாற்றங்கள் குறித்து அதிகப்படியான கேள்விகள் எழுந்து வரும் வேளையில், தற்போது டிரம்ப் நிர்வாக பென்டகன்-ஐயும் இதில் பயன்படுத்தியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தாக்குதலும்.. தாமதமும்..

அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு தளங்கள், கடலோர ரேடார் அமைப்புகள் உள்ளிட்ட ராணுவ இலக்குகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த நடவடிக்கை குறித்து பென்டகன் உடனடியாக அறிவிக்காமல், அமெரிக்க நேரப்படி மாலை 4 மணிக்கு, அதாவது பங்குச் சந்தை வர்த்தகம் முடிந்த சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நேரத் தாமதம், உலக நிதிச் சந்தைகளில் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவா என்ற சந்தேகம் பலரிடையே எழுந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை..

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையில் எந்தவொரு பதற்றமும் ஏற்பட்டாலும், சர்வதேச கச்சா எண்ணெய் விலைகளில் உடனடி தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஈரானின் கடலோர உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானால், உலக சந்தைகளில் பதற்றம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதுபோன்ற சூழலில், சந்தை இயங்கிக்கொண்டிருக்கும்போதே அறிவிப்பு வெளியானால், முதலீட்டாளர்கள் பதற்றத்தில் பங்குகளை விற்பனை செய்யும் நிலை உருவாகலாம். அதேபோல், எண்ணெய் விலைகளிலும் திடீர் ஏற்றம் ஏற்படக்கூடும். இதைத் தவிர்க்கும் நோக்கில் அறிவிப்பு சந்தை மூடிய பிறகு வெளியிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் தரப்பில் பல முறை டிரம்ப் அறிவிப்புகள் முழுமையாக சந்தையை திசைதிருப்பும் செய்திகள் என பல முறை விமர்சனம் செய்துள்ளது. தற்போது இதில் பென்டகன்-ம் இணைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+