US GDP: டிரம்ப் பேசிய பேச்சுக்கு.. நடப்பதை பாருங்க..!

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து தினமும் ஒரு அதிரடி அறிவிப்பு என்ற வகையில் அந்நாட்டு மக்களையும், உலக நாடுகளையும் பதற்றத்திலேயே வைத்திருந்தார். ஆனால் அமெரிக்க வளர்ச்சிக்கு முக்கியமான பொருளாதாரத்தில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை என்பது பலரின் கருத்தாக இருந்த நிலையில் தற்போது இதை உறுதி செய்யும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பொருளாதாரம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் 0.5% சுருங்கியது, இது முந்தைய மதிப்பீடுகளை விட மோசமானது என்று தெரியவந்துள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாக காலத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் முதல் காலாண்டில் 0.5% சுருங்கியதாக அந்நாட்டு வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

US GDP: டிரம்ப் பேசிய பேச்சுக்கு.. நடப்பதை பாருங்க..!

முதல் காலாண்டில் ஏற்பட்ட சரிவு

டிரம்ப் வரிகளை விதிப்பதற்கு முன்பு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டுப் பொருட்களை அவசரமாக இறக்குமதி செய்ததால், முதல் காலாண்டில் வளர்ச்சி குறைந்தது. முன்னதாக, ஜனவரி-மார்ச் மாதங்களில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2% குறைந்ததாக வர்த்தகத் துறை மதிப்பிட்டிருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியை அளவீடும் குறியீடு. வளர்ச்சி பாதையில் இருந்தால் 2 சதவீதம், 3 சதவீதம் என குறிக்கப்பட்டும், இதுவே பொருளாதாரம் சுருங்கியிருந்தால் -0.5 சதவீதம் என குறிக்கப்படும்.

2024 ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 2.4% அதிகரித்திருந்த நிலையில், ஜனவரி-மார்ச் மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு, பொருளாதாரத்தில் சுருக்கம் ஏற்பட்ட முதல் முறையாகும். மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக நிகழ்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இறக்குமதி 37.9% அதிகரித்துள்ளது, இது 2020 க்குப் பிறகு மிக வேகமான வளர்ச்சியாகும், மேலும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கிட்டத்தட்ட 4.7% குறைத்துள்ளது. நுகர்வோர் செலவினமும் கடுமையாகக் குறைந்துள்ளது.

கூடுதலாக, மத்திய அரசின் செலவினம் 4.6% குறைந்துள்ளது, இது 1986 க்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய வீழ்ச்சி எனவும் அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தின் இந்த சுருக்கமானது, உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு நுகர்வு பழக்கங்களில் ஏற்பட்ட மாறுதல்களின் எதிரோலியாக பார்க்கப்படுகிறது. இது அமெரிக்காவின் டிரம்ப் அரசுக்கு ஒரு சவாலாக உள்ளது. ஏனெனில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதற்கும் தான் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார். ஆனால் இங்கு முதல் காலாண்டிலேயே அமெரிக்க பொருளாதாரம் டான்ஸ் ஆடுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+