200 ஆண்டுகளில் இல்லாத.. வரலாறு காணா பொருளாதார சரிவில் அமெரிக்கா! வல்லரசை சரித்த கொரோனா!

உலகிலேயே இயற்கை வளங்களாலும், பொருளாதார பண பலத்தாலும் செல்வ செழிப்பான நாடு என்றால் அது அமெரிக்கா தான்.

அப்பேற்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரம் சரிவது எல்லாம் சாத்தியமே இல்லை என்று தான், பல ஆண்டுகளாக பேசிக் கொண்டு இருந்தோம்.

ஆனால் கண்ணுக்கே தெரியாத கொரோனா வைரஸ், அமெரிக்க பொருளாதாரத்தை அடித்து நொறுக்கி எரிந்து இருக்கிறது. வல்லரசை வெளுத்து வாங்கி இருக்கிறது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு, அமெரிக்காவுக்கு, பொருளாதார ரீதியாக பலத்த அடியைக் கொடுத்து இருக்கிறது கொரோனா வைரஸ்.

என்ன அடி

என்ன அடி

ஏப்ரல் 2020 - ஜூன் 2020 வரையான காலாண்டில், அமெரிக்காவின் பொருளாதாரம் 32.9 சதவிகிதம் சரிந்து இருக்கிறது. ஆம். நீங்கள் படித்தது சரி தான். அமெரிக்க பொருளாதாரம், இந்த ஒரே காலாண்டில், 32.9 சதவிகிதம், சரிந்து இருக்கிறது. இப்போது சொல்லுங்கள், இது அமெரிக்காவுக்கு விழுந்த மரண அடியா இல்லையா?

200 ஆண்டுகளில் இல்லை

200 ஆண்டுகளில் இல்லை

1921-ம் ஆண்டு நிலவிய பெரிய பொருளாதார நெருக்கடியோ (Great Depression) அல்லது மற்ற ரெசசன் காலங்களிலோ, இதுவரை அமெரிக்க பொருளாதாரம் பார்த்த பல்வேறு பொருளாதார சரிவிலோ, கடந்த 200 ஆண்டுகளில், இந்த அளவுக்கு அமெரிக்க பொருளாதாரம் எப்போதும் சரிந்தது இல்லை என்கிறது சி என் பி சி பத்திரிகை.

73 ஆண்டு காலத்தில் இல்லாத அடி

73 ஆண்டு காலத்தில் இல்லாத அடி

கடந்த 1947 கால கட்டத்தில், அமெரிக்க பொருளாதாரம் இப்படி ஒரு பெரிய சரிவைச் சந்தித்தது என்கிறது பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை. ஆனால் 1947-ல் எவ்வளவு சரிவைச் சந்தித்தது என்கிற விவரங்களைச் சொல்லவில்லை. அதற்குப் பிறகு, அமெரிக்க பொருளாதாரம் இப்போது தான் இவ்வளவு பெரிய பொருளாதார சரிவைச் சந்தித்து இருக்கிறது என, அமெரிக்காவின் வணிகத் துறையே சொல்லி இருக்கிறது என்றால் அடி எவ்வளவு பெரியது எனப் புரியும்.

ஐசன்ஹோவர் காலகட்டம்

ஐசன்ஹோவர் காலகட்டம்

1947 முதல் 2019 வரையான இடைப்பட்ட ஆண்டுகளில், அமெரிக்க பொருளாதாரம் பார்த்த மிகப் பெரிய பொருளாதார சரிவு என்றால், 1958-ம் ஆண்டில், 34-வது அமெரிக்க அதிபராக ட்வைட் ஐசன்ஹோர் (Dwight Eisenhower) இருந்த காலத்தில் 10 % பொருளாதார சரிவைக் கண்டது தானாம். 10 சதவிகிதம் எங்கே? 33 சதவிகிதம் எங்கே?

வளர்ச்சிக்கு தடை

வளர்ச்சிக்கு தடை

கடந்த 11 ஆண்டு காலமாக, தொடர்ந்து வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சி, 2020-ம் ஆண்டு முதல் தடை பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 2020 - மார்ச் 2020 வரையான முதல் காலாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 5 % பொருளாதார சரிவைக் கண்டது. இப்போது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 33 % சரிவைக் கண்டு இருக்கிறது.

முதலீடுகள் & வீடுகள்

முதலீடுகள் & வீடுகள்

கொரோனா வைரஸ் அதிகம் பரவிக் கொண்டு இருக்கும் அமெரிக்க நாட்டில், வியாபார முதலீடுகள் (Business Investments) மற்றும் குடியிருப்பு வீடுகள் (Residential Housing) என பலதும் கடுமையாக சரிந்து இருக்கிறதாம். அரசுக்கு போதிய வரி வருவாய் இல்லாததால், அரசு செலவிடும் தொகையும் குறைந்து இருக்கிறதாம்.

சரிவுக்கான காரணங்கள் என்ன

சரிவுக்கான காரணங்கள் என்ன

அமெரிக்காவின் பொருளாதாரம் அதிகம் வாடிக்கையாளர்களின் நுகர்வைச் சார்ந்து இருக்கிறதாம். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தில், 70 % பங்களிப்பு, வாடிக்கையாளர்களின் நுகர்வில் இருந்து தான் வருகிறதாம். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நுகர்வே 34 % சரிந்து இருக்கிறதாம்.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, அரசு அறிவித்து இருக்கும் கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளால், மக்கள் இயல்பாக கூடும் உணவகங்கள், பார்கள், பொழுது போக்கு தளங்கள் போன்றவைகள் மூடப்பட்டு இருக்கின்றனவாம். எனவே நுகர்வும் பெரிய அளவில் சரிந்து இருக்கிறதாம்.

வேலை இழப்புகள்

வேலை இழப்புகள்

அமெரிக்காவின் இந்த நெருக்கடியான சூழலில், லட்சக் கணக்கானவர்களின் வேலை காணாமல் போய் இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம் 15 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறதாம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1.4 மில்லியன் பேர் (14 லட்சம் பேர்) Unemployment benefit-க்காக விண்ணப்பித்து இருக்கிறார்களாம். அமெரிக்காவில் 10 லட்சம் பேருக்கு மேல் Unemployment benefit-க்கு விண்ணப்பிப்பது, தொடர்ச்சியாக இது 19-வது வாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை

நம்பிக்கை

இப்படி சுத்தி சுத்தி மரண அடி வாங்கிக் கொண்டு இருக்கும் அமெரிக்க பொருளாதாரம், இந்த ஜூலை 2020 - செப்டம்பர் 2020 காலாண்டில் மீண்டு வர நிறைய வாய்ப்பு இருப்பதாக அனலிஸ்டுகள் தங்கள் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள். ட்ரம்ப் அரசும், இந்த செப்டமப்ர் காலாண்டில் பொருளாதாரம் மீண்டு விடும் என நம்புகிறது. எப்படியோ இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இருந்து மீண்டால் சரி தான்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+