வாஷிங்டன்: அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகித உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாகப் புதன்கிழமை மாலை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இதற்கான கூட்டமும் டிசம்பர் மாத கூட உள்ளதாகவும் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
பொருளாதாரச் சூழ்நிலைகள்
கடந்த சில மாதங்களாகவே சீனா மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் தாக்கத்தால் சர்வதேச பொருளாதாரம் மந்தமாக இருந்து வருகிறது.
இச்சூழ்நிலைகளில் அமெரிக்கச் சந்தையும் கணிசமாகப் பாதிக்கப்பட்டது, அதுமட்டும் அல்லாமல் அந்நாட்டின் லேபர் சந்தையில் குறைவான வேலைவாய்ப்புகள் மட்டும் உருவாகியுள்ளதால் பெடரல் வங்கி தனது வட்டி உயர்வு நடவடிக்கையை டிசம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.
டிசம்பர் மாதம்
பெடரல் வங்கியின் இலக்குகள் படி அதிகளவிலான வேலைவாய்ப்பு மற்றும் 2 சதவீத பணவீக்கம் உருவானால் கண்டிப்பாக டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் எனப் பெடர்ல் வங்கி தெரிவித்துள்ளது.
ஃபியூச்சர் முதலீடு
டிசம்பர் மாதம் வரை வட்டி உயர்வை ஒத்திவைத்துள்ளதால், அமெரிக்க ஃபியூச்சர் முதலீடுகளின் லாப கணிப்புகள் 34 சதவீதத்தில் இருந்து 43 சதவீதம் வரை உயர்த்தியுள்ளனர் முதலீட்டாளர்கள்.
இந்திய சந்தை
பெடரல் வங்கியின் இத்தகைய முடிவால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு இந்திய சந்தையில் அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீட்டு அளவு தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.
இதனால் சென்செக்ஸ் குறியீடு 27,500 புள்ளிகள் வரை உயரும் எனச் சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை
பெடரல் வங்கியின் முடிவுகளை எதிர்பார்த்து அமெரிக்க முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகளவில் முதலீட்டைக் குறைத்தால் சென்செக்ஸ் குறியீடு நேற்று 213 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
லாபம் மற்றும் நஷ்டம்
இன்றைய வர்த்தகத்தில் லாபம் மற்றும் நஷ்டம் அடைந்தவர்கள் பற்றித் தொரிந்துக்கொள்ள ஒரு கிளீக் போதும்.


Click it and Unblock the Notifications