அமெரிக்க அரசு ஜனவரி 31 ஆம் தேதி சனிக்கிழமை அரசு சேவைகளில் ஒரு பகுதியை முடக்கும் நிலைக்கு (partial shutdown) சென்றது. நாடாளுமன்றத்தில் டிரம்ப் அரசின் நிதி ஒதுக்கீடு கோரிக்கையை ஒப்புதல் பெற முடியாத காரணத்தாலும், இதற்கான காலக்கெடு கடந்துவிட்ட நிலையிலும் அமெரிக்க அரசு ஷட்டவுன் நிலைக்கு சென்றுள்ளது.
அமெரிக்க செனட் அங்கீகரித்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் அடுத்த வாரம் அங்கீகரிக்க உள்ளதால், இந்த முடக்கம் சில நாட்களுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அரசு சேவைகளில் சிறு இடையூறு ஏற்படலாம் என தெரிகிறது.

இந்த முடக்கத்திற்கு முக்கிய காரணம் டெமாக்ரடிக் கட்சியின் நிலைப்பாடு. மின்னசோட்டாவின் மின்னியாப்பொலிஸில் இரு போராட்டக்காரர்களை ஃபெடரல் குடியேற்ற அதிகாரிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையை பாதித்தது. இதனால் உள்நாட்டு பாதுகாப்புத் துறைக்கு (DHS) புதிய நிதி ஒதுக்கீட்டை தடுத்தது.
தற்போது நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அரசு செயல்பாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு பாதிக்கப்படும். கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இடையூறு ஏற்படலாம். ஆனால் செனட் அங்கீகரித்த தற்காலிக நிதி ஒப்பந்தம் DHS-க்கு இரு வாரங்களுக்கு போதுமானது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நிதி ஒதுக்கீடு குறித்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தால் சில நாட்களுக்குள் நிதி மீண்டும் கிடைக்கும். இதனால் பெரிய இடையூறு ஏற்படாது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2வது ஆட்சியில் நடக்கும் 2வது ஷட்டவுன் இது. முதல் ஷட்டவுன் காலத்தில் அரசு ஊழியர்கள், அரசு பணியில் இருக்கும் ஒப்பந்த ஊழியர்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்த ஷட்டவுன் அடுத்த வாரமும் நீடித்தால் கட்டாயம் பணிநீக்கம் இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்க பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை பதிவான தடுமாற்றத்திற்கு இதுவும் முக்கியமான காரணமாக உள்ளது.
நீண்டகால முடக்கம் ஏற்பட்டால் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டியிருக்கும் அல்லது சம்பளம் இல்லாத விடுமுறையில் செல்ல வேண்டியிருக்கும்.
இந்த முடக்கம் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் குறுகிய காலமாக இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது.
More From GoodReturns

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

டிரம்ப் செய்யும் தில்லுமுல்லு.. உண்மையை உடைத்த ஈரான் தலைவர்..!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!



Click it and Unblock the Notifications