அமெரிக்க அரசின் இயக்கத்திற்கு அடிப்படை தேவையான செலவின திட்டங்கள் (Appropriation Bills) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சரியான காலக்கெடுவிற்குள் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வேளையில், பல அமைச்சகங்கள் மற்றும் அரசு சேவைகள் தங்கள் செயல்பாடுகள் பாதிக்கப்பட துவங்கியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு சேவைகள் ஷட்டவுன் ஆகியுள்ளது.
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், புதன்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்த ஷட்டவுன் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஒரு நாளுக்கு சுமார் 15 பில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்துவதாக எச்சரித்தார். இந்த இழப்பு, நாட்டின் உற்பத்தி குறைவால் ஏற்படுகிறது, இது பொருளாதாரத்தின் தசையை பாதிக்கத் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார்.

இந்த ஷட்டவுன் தொடர்ந்தால், அமெரிக்காவின் வளர்ச்சி வேகம் குறையும், இது செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய முதலீடுகளை தடைப்படுத்தும் என்று பெசென்ட் எச்சரித்தார். அமெரிக்காவில் தற்போது ஏஐ துறையில் நடைபெறும் முதலீட்டு அலை நிலையாகவும் மற்றும் தொடக்க கட்டத்திலேயே உள்ளது. ஆனால் இந்த ஷட்டவுன் அதற்கு பெரிய தடையாக மாறியுள்ளது என்று அவர் விளக்கினார்.
இந்த ஷட்டவுன் பின்னணியில், அந்நாட்டின் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உறுப்பினர்களிடையே செலவின திட்டத்தில் இறுதி ஒப்புதல் இல்லாதது முக்கிய காரணம். பெசென்ட், ஜனநாயக கட்சியினரை "நாட்டின் ஹீரோக்களாக" இருந்து குடியரசு கட்சியுடன் இணைந்து இந்த ஷட்டவுன் முடிவுக்கு கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்த கருத்து வேறுபாடு, அமெரிக்க அரசின் அடிப்படை இயக்கத்தை பாதிக்கிறது, இது பொருளாதார நிச்சயமின்மையை உருவாக்குகிறது. இந்த நிலைமை, அரசு ஊழியர்களின் சம்பளம் முதல் அரசு சேவைகள் வரை, பாதுகாப்பு துறை முதல் துப்புறவு துறை வரை, அமைச்சர்கள் சம்பளம் முதல் அலுவலக ஊழியர்கள் சம்பளம் வரை அனைத்தையும் பாதிக்கிறது. பெசென்டின் இந்த கோரிக்கை, இரு கட்சிகளும் இணைந்து விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் இந்த நிச்சயமின்மை, முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி திருப்புகிறது. குறிப்பாக, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் அவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
அமெரிக்காவின் நிதியாண்டு செப்டம்பர் 30, 2025 உடன் முடிந்த நிலையில், புதிய நிதியாண்டுக்கான டிரம்ப் அரசு உருவாக்கிய செலவின கொள்கைக்கு செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் சுகாதார துறை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, மானியம் ஆகியவற்ரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், செலவின மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல், அமெரிக்க அரசு ஷட்டவுன்-க்கு தள்ளப்பட்டு உள்ளது. இது இரண்டு வாரங்களாக நீடித்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications