அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு மிகப்பெரிய ஒரு சிக்கலை எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறது. அமெரிக்க அரசாங்கம் தங்கள் நினைத்தபடி செனட் அவையில் நிதி மசோதாவிற்கான ஒப்புதல் பெற முடியவில்லை .இதனால் அரசின் செயல்பாடுகளுக்கு போதிய நிதி இல்லாமல் அமெரிக்க அரசாங்கம் முடங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
முடங்கிய அரசு சேவைகள்: அமெரிக்க அரசுக்கு சொந்தமான அத்தியாவசியம் அல்லாத மற்ற அனைத்து அரசாங்க வேலைகளும் முடங்கி போயுள்ளன. லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் இதன் மூலம் பணியை இழக்க உள்ளனர் . அமெரிக்காவில் இவ்வாறு அரசாங்கம் ஷட் டவுன் ஆவது என்பது இது முதல் முறை கிடையாது. 1981 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 15 முறை இவ்வாறு அரசாங்கம் நிதி இல்லாமல் செயல்பட முடியாத நிலைக்கு சென்று இருக்கிறது.

35 நாட்கள் நீடித்த ஷட்டவுன்: பொதுவாக இந்த ஷட் டவுன் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை நீடிக்கும். முன்னதாக முதன் முறையாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி வகித்த போதும் இதே போன்ற ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. 2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 35 நாட்கள் அமெரிக்க அரசாங்கம் ஷட் டவுன் நிலைக்கு சென்றது. அப்போது 3 லட்சத்து 40 ஆயிரம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.
என்ன காரணம்: அமெரிக்கா அரசு எதிர்க்கட்சியினரே இந்த ஷட் டவுன் நிலைக்கு காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளுமே அரசின் செலவினங்களுக்கான நிதி மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்காமல் போனது இந்த சூழ்நிலைக்கு முக்கிய காரணம் ஆகியிருக்கிறது .
ஏன் ஷட் டவுன் நிலை?: ஷட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில் என்னென்ன சேவைகள் செயல்படும் என்னென்ன சேவைகள் இருக்காது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஒவ்வொரு அரசு துறைக்குமான நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதா இரு சபைகளிலும் நிறைவேற்றப்படும். அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு முன்னதாகவே இது நிறைவேற்றப்பட்டு விட வேண்டும். அதன் பிறகு தான் அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஅரசு துறைகள் செயல்படும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி வரை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. அப்படி என்றால் அரசு செயல்படுவதற்கு நிதி கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
1 கோடி பணம் சம்பாதிக்க எளிய வழி Mutual Fund
மெடிகேர் திட்டம்: சமூக பாதுகாப்பு திட்டமான மெடிகேர் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்ந்து செயல்படும் . ஆனால் இந்த துறையில் வேலை செய்து வந்த 12 சதவீத ஊழியர்கள் வேலை இழப்பார்கள்.
ஊட்டச்சத்து திட்டம்: அமெரிக்க அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக ஒரு ஊட்டச்சத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது . இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

அஞ்சல் சேவைகள்: அரசின் பட்ஜெட்டை நம்பி அஞ்சல் துறை செயல்படவில்லை என்பதால் அஞ்சல் அலுவலகங்கள் திறந்திருக்கும் அஞ்சல் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.
விமான நிலையங்கள்: விமான நிலையத்தில் ஏர் டிராபிக் கட்டுப்பாட்டாளர்களாக வேலை செய்யக்கூடிய 13,000 பேர் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர் . விமான நிலையங்கள் வழக்கம் போல இயங்கும் ஆனால் இந்த பிரிவில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது.
நீதிமன்றங்கள் செயல்படுமா: நீதிமன்றங்கள் செயல்பாடு என்பது சற்று சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கடந்து முறை ஷட் டவுனில் ஐந்து வாரங்கள் வரை மட்டுமே நீதிமன்றங்களால் தங்களிடமிருந்த நிதியை கொண்டு இயங்க முடிந்தது .
ராணுவம் : இரண்டு மில்லியன் அமெரிக்க ராணுவ வீரர்களும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். தேசிய பாதுகாப்பு படை வீரர்களும் தொடர்ந்து வேலை செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்கும் மேல் இந்த ஷட் டவுன் நீடித்தால் லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்குள் டிரம்ப் நிர்வாகம் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

அமெரிக்க தலைநகரை ஆளப்போகும் தமிழ் பெண்..!! தேனி டூ வாஷிங்டன்..!! யார் இந்த ரினி சம்பத்?

ஈரான் கற்காலத்திற்கு செல்லும்; அமெரிக்காவின் அடுத்தகட்ட போர் திட்டங்களை வெளியிட்ட டிரம்ப்!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications