அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் பெரும்பாலும் ஹெச்1பி விசா வாயிலாகவே பணியாற்றும் காரணத்தால், பல கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் பணியாற்றும் ஹெச்1பி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் திட்டம் டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தற்போது அமெரிக்க அரசு எடுத்துள்ள புதிய முடிவால் இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
டொனால்டு டிரம்ப் அதிரடி
டிரம்ப் ஆட்சியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அமெரிக்காவில் அளிக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் குறைக்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் தற்போது நடைமுறையில் இருக்கும் லாட்டரி முறையை முழுமையாக நீக்கிவிட்டுச் சம்பளம் அடிப்படையிலான விசா முறையைக் கொண்டு வந்தார். இதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே விசா வாங்கியுள்ளவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார்.
ஜோ பைடன் சூப்பர்
ஆனால் ஜோ பைடன் ஆட்சியில் இந்தக் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், டிரம்ப் ஆட்சியில் ஹெச்1பி விசா ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் திட்டம் தற்போது மே 12ஆம் தேதி வரையில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும் இது அடுத்த ஆண்டு நவம்பர் 14 வரையில் ஒத்திவைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடிப்படை சம்பள உயர்வு
டொனால்டு டிரம்ப் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள அளவீடுகளைக் காப்பாற்றும் முடிவில் ஹெச்1பி விசா உரிமையாளர்கள், நிறுவனங்கள் மூலம் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ள நபர்களின் அடிப்படை சம்பளத்தை 23 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாக உயர்த்தும் திட்டம் தான் இது.
நாஸ்காம் கருத்து
இந்தத் திட்டம் குறித்து இந்திய ஐடி துறையின் அமைப்பான நாஸ்காம் கூறுகையில், ஹெச்1பி விசா ஊழியர்கள் மக்கும் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்திருக்கும் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் போதும் அமெரிக்கப் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் அதிகமாகப் பாதிக்கும் எனத் தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா
இதேவேளையில் பைடன் உத்தரவு மூலம் ஹெச்1பி விசா வழங்குவதில் மீண்டும் லாட்டரி முறை அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், 2022ஆம் நிதியாண்டுக்கான ஹெச்1பி விசா-வை பெறுவதற்கு அக்டோபர் 1 முதல் விண்ணப்பம் பெறப்பட்டு வரும் நிலையில், தேர்வு செய்யும் பணிகளை மார்ச் மாதம் இறுதியில் முடிய உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications