வாஷிங்டன்: பொருளாதார வளர்ச்சியிலும், பாதுகாப்புத் துறையிலும், டெக்னாலஜியிலும் அமெரிக்காவுக்கு இணையாகச் சீனா தொடர்ந்து பெருமளவிலான வளர்ச்சியை அடைந்து வரும் வேளையில், இரு நாடுகளுக்கும் கடந்த 10 வருடமாகக் கடுமையான வர்த்தக போர் எதிர்கொண்டு வருகிறது.
அமெரிக்க அரசு சீன பொருட்கள் மீதும், சீன அரசு அமெரிக்க பொருட்கள் மீதும் கடுமையான வரி, கட்டணம், கட்டுப்பாடு விதித்து பெரும் பாதிப்பை இரு நாடுகளும் ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது சீனா தான், காரணம் இரு நாடுகளை ஒப்பிடுகையில் சீனா தான் பெரிய உற்பத்தி நாடு, அமெரிக்கா அதன் முக்கிய வர்த்தக சந்தை. இப்படியிருக்கையில் அமெரிக்கா சீனா மீது மிகப்பெரிய வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிக்டாக் முதல் பல டெக் சேவைகளை முடக்கி வரும் அந்நாட்டு அரசு, அடுத்த பெரிய தடையை விதிக்க முடிவு செய்துள்ளது. இதன் சீனாவின் மென்பொருள் மற்றும் வன்பொருளை அமெரிக்கச் சாலைகளில் பயன்படுத்தப்படும் கனெக்டெட் வாகனங்களில் தடை செய்ய அமெரிக்க வர்த்தகத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை கிட்டத்தட்டச் சீனாவின் அனைத்து கார்களையும் அமெரிக்க சந்தையில் நுழைவதை மொத்தமாகத் தடுக்கும்.
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி இந்த புதிய கட்டுப்பாடு மூலம் சீன கார்கள் அந்நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது மட்டும் அல்லாமல், அமெரிக்காவில் விற்பனை செய்யும் அமெரிக்கா மற்றும் பிற நாட்டு பிராண்டுகளும், தங்களுடைய கார் தயாரிப்பில் வரும் ஆண்டுகளில் இருந்து சீன மென்பொருள் மற்றும் வன்பொருளை அகற்றும்படி அமெரிக்க அரசு கட்டாயப்படுத்தும். இது சீன ஆட்டோமொபைல் துறைக்கு பெரும் நெருக்கடியாகும்.

ஜோ பைடன் நிர்வாகம், சீன நிறுவனங்கள் அமெரிக்க வாகன ஓட்டுநர்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது பல தரப்பட்ட தரவுகளைச் சேகரித்து வருகிறது. இண்டர்நெட் மற்றும் நேவிகேஷன் அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் சீனா நிறுவனங்கள் அமெரிக்க கார் உரிமையாளர்களுக்கு பாதிப்பு விளைவிக்கக் கூடும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த வருடம் பிப்ரவரி மாதம் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த தடை நடவடிக்கை மூலம் சீன கார் பிராண்டுகள் அமெரிக்காவில் செல்ஃப் டிரைவிங் கார்களை பரிசோதனை செய்யப்படுவதைத் தடுக்கும், இதை தொடர்ந்து இந்த தடை ரஷ்யா உள்ளிட்ட அமெரிக்காவின் பிற எதிரி நாடுகளுக்கும் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications