அமெரிக்கா - சீனா மத்தியில் மீண்டும் வர்த்தகத் தடை, வரி விதிப்பு.. என்ன காரணம்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன அரசு அந்நாட்டில் இருக்கும் உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் மக்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து அமெரிக்கா DJI மட்டும் அல்லாமல் மொத்தம் 8 சீன நிறுவனங்களைச் சீன ராணுவத்துடன் தொடர்புடையது எனக் கூறி தடை விதித்தது.

 

https://tamil.goodreturns.in/world/russian-billionaire-vladimir-potanin-faces-7-billion-divorce-claim-in-london-025964.html

இதைத் தொடர்ந்து பல வர்த்தகத் தடை மற்றும் புதிய வரி விதிப்புகளை அமெரிக்கச் சீனா மீது விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்திலும் ஒருமனதாக வாக்களிக்கப்பட்டு உள்ளது.

https://tamil.goodreturns.in/world/apple-ceo-tim-cook-secretly-signed-275-billion-deal-with-china-in-2016-report-025951.html

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு சீனா மீது வர்த்தகத் தடை மற்றும் புதிய வரி விதிப்புகளை விதிக்கத் தயாராகி வருகிறது, இதில் முதல் கட்டமாக 8 நிறுவனங்கள் மீதான தடையைத் தொடர்ந்து ஜோ பைடன் அரசு அமெரிக்கர்களை அடிமையாக்கியுள்ள பெயின்கில்லர் உற்பத்தியாளர்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்திலும் இதுபோன்ற கடுமையான வரி விதிப்பு மற்றும் வர்த்தகம் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, தற்போது ஜோ பைடன் ஆட்சியிலும் தொடர்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றம்

அமெரிக்க நாடாளுமன்றம்

வியாழக்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தில், சீனா அரசு அந்நாட்டில் இருக்கும் உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் மக்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து உலகில் முதல் நாடாக உய்குர் மக்கள் அதிகம் வாழும் Xinjiang பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எந்தப் பொருட்களையும் அமெரிக்கா வாங்காது என அறிவித்துள்ளது.

Xinjiang பகுதி
 

Xinjiang பகுதி

சீன அரசு Xinjiang பகுதியில் இருக்கும் உய்குர் மக்களைக் கட்டாயப்படுத்தி அதிக நேரம் உற்பத்தி பணியில் ஈடுபடுத்துகிறது சீனா. இதைக் காரணம் காட்டி தற்போது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு Xinjiang பகுதி பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விர்ச்சுவல் தடை விதித்துள்ளது.

உய்குர் மக்கள்

உய்குர் மக்கள்

இதேபோல் பல அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் உய்குர் கட்டாயத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் சீன நிறுவனங்கள் உய்குர் மக்களைக் கட்டாயப்படுத்தவில்லை என எவ்வளவு ஆதாரங்களைக் காட்டினாலும் Xinjiang மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் இறக்குமதி செய்யாது என அறிவித்துள்ளது.

20 சதவீத கார்மென்ட்ஸ்

20 சதவீத கார்மென்ட்ஸ்

Xinjiang பகுதியில் பருத்தி அதிகளவில் விளைகிறது, அமெரிக்காவிற்கு ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்யப்பட்டும் 20 சதவீத கார்மென்ட்ஸ் Xinjiang பகுதியில் இருந்து தான் உருவாகி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உய்குர் மற்றும் துரிக் முஸ்லீம்

உய்குர் மற்றும் துரிக் முஸ்லீம்

அமெரிக்க அரசு அதிகாரிகள் கணிப்பின் படி சீனாவில் 10 லட்சத்திற்கும் அதிகமான உய்குர் மற்றும் துரிக் பேசும் முஸ்லீம் மக்களைத் தனது இஸ்லாம் கலாச்சாரத்தில் இருந்து வெளியேற்றி சீனாவின் HAN மதத்திற்கு மாற்றப்பட்டு முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

பெய்ஜிங் குளிர்கால விளையாட்டு

பெய்ஜிங் குளிர்கால விளையாட்டு

இந்தப் பிரச்சனை காரணமாக அடுத்த ஆண்டுச் சீனாவில் நடக்கும் பெய்ஜிங் குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US hits China with new trade curbs, sanctions over Uyghur rights

US hits China with new trade curbs, sanctions over Uyghur rights அமெரிக்கா - சீனா மத்தியில் மீண்டும் வர்த்தகத் தடை, வரி விதிப்பு.. என்ன காரணம்..?!
Story first published: Friday, December 17, 2021, 14:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X