வேலையிழந்தவர்களுக்கு உதவி தொகை.. தொழிற்துறைக்கும் சலுகை.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலகின் வல்லரசு நாடாக இருந்தாலும்,, மற்ற நாடுகளை விட, கொரோனா வைரஸ் தொற்றால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வருவது அமெரிக்கா தான்.

இதுவரை 1 கோடியே 84 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஒரு புறம் கொரோனா மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், மறுபுறம், பொருளாதாரத்தினையும் வாரி சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது.

பெங்களூர் தொழிற்சாலை திட்டத்தை கைவிடும் போயிங்.. கர்நாடகாவிற்கு பெரும் இழப்பு..!பெங்களூர் தொழிற்சாலை திட்டத்தை கைவிடும் போயிங்.. கர்நாடகாவிற்கு பெரும் இழப்பு..!

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

அதுமட்டும் அல்ல, கொரோனாவால் அமெரிக்காவில் சுமார் 1.20 கோடி பேருக்கு மேல் தங்களது வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். இதனால், பல லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பொருளாதாரம் மோசமான பின்னடைவை சந்தித்து வருகின்றது.

வறுமையின் பிடியில் அமெரிக்க மக்கள்

வறுமையின் பிடியில் அமெரிக்க மக்கள்

இதனால் அமெரிக்கா 60 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து வறுமை கண்காணிப்பு தொடங்கியதில் இருந்து, ஒரே ஆண்டில் இவ்வளவு வறுமை அதிகரித்து இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. கொரோனாவால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட அமெரிக்கர்கள், தங்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசின் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

சூமுக நிலையை எட்டியுள்ள பேச்சுவார்த்தை
 

சூமுக நிலையை எட்டியுள்ள பேச்சுவார்த்தை

உண்மையில் அமெரிக்கா தேர்தலுக்கு முன்பிருந்தே இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வந்த நிலையில், தற்போது தான் ஒரு சூமுக நிலையை இரு கட்சியினரும் எட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், முதல் கட்டமாக 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் கொரோனா நிவாரணமாக ஊக்கத் தொகையாக ஒதுக்கப்பட்டது.

போதுமானதாக இல்லை

போதுமானதாக இல்லை

எனினும் தற்போது வரை அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடாக இல்லை. இதன் காரணமாக அமெரிக்க பொருளாதாரமும் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் கொரோனா நிவாரணத்துக்காக அமெரிக்க அரசு ஒதுக்கிய மேற்கண்ட நிதி போதுமானதாக இல்லை. மேலும் இந்த நிதியின் கீழ் கொண்டுவரப்பட்ட கொரோனா நிவாரண திட்டங்கள் பல ஏற்கனவே காலாவதியாகி விட்டன.

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஊக்கத்தொகை

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஊக்கத்தொகை

இந்த நிலையில் தான் தற்போது இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க நாடாளுமன்றமும் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், இந்த நிவாரணத் தொகையில் இருந்து கொரோனாவால் வறுமைக்கோட்டுக்கு தள்ளப்பட்ட ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தலா 600 டாலர்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலையிழந்தவருக்கு ஊக்கத்தொகை

வேலையிழந்தவருக்கு ஊக்கத்தொகை

இதேபோல் வேலை வாய்ப்பை இழந்த அமெரிக்கர்களுக்கு வாரத்துக்கு 300 அமெரிக்க டாலர்கள் நிவாரண தொகையாக அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தவிர கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்வதற்கான நிதியும் இந்த நிவாரண தொகையிலிருந்து ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்காக அனுப்பப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US house passes $900 billion corona relief package

US news updates.. US house passes $900 billion corona relief package
Story first published: Tuesday, December 22, 2020, 15:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X