அமெரிக்கா தனது குடியேற்றக் கொள்கையில் தொடர்ந்து கடுமையாக்கி வருகிறது, சமீபத்தில் ஹெச்1பி விசா வழங்குவதில் சம்பளம் அடிப்படையிலான தேர்வு முறை, ஈபி-5 விசா கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து கட்டுப்பாடுகளை விதித்து வந்த நிலையில், புதிதாக விசா பாண்ட் திட்டத்தின் கீழ் 50 நாடுகளை சேர்த்துள்ளது.
இதில் முதலில் இந்தியா இருக்குமா என அச்சம் நிலவி வந்த நிலையில், இந்தியா இதில் விடுவிக்கப்பட்டாலும் அண்டை நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டு உள்ளது.

விசா பாண்ட் திட்டம் என்பது அமெரிக்காவிற்கு பிசினஸ் அல்லது சுற்றுலா விசாவில் செல்வோர் தங்களுடைய விசா காலம் முடிந்தவுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அரசு இத்திட்டத்தை வைத்துள்ளது.
முறைகேடாக அமெரிக்காவில் செட்டிலாக வேண்டும் என திட்டமிடுவோர் இந்த அதிகப்படியான விசா பாண்ட் கட்டணத்தைச் செலுத்த முடியது என்பதால் B1, B2 விசா கீழ் செல்வோர் மீது இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த தொகை ஒரு பாதுகாப்பு தொகை மட்டுமே என்பதால் இதைச் சொந்த நாட்டிற்குத் திரும்பிய பின்னர் உரிய நபருக்குத் திரும்பிச் செலுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்காவில் இருக்கும் காலத்திற்கு மட்டுமே இந்த தொகை அமெரிக்கத் தூதரக அமைப்பிடம் இருக்கும்.
எதற்காக இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது..? எதன் அடிப்படையில் 50 நாடுகள் தேர்வு செய்யப்படுகிறது..? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும்.. இதற்கான பதில் இதோ..
அமெரிக்க அரசின் விசா விதிமுறைகளை அதிகம் மீறும் நாட்டினர், விசா காலம் முடிந்தும் அரசுக்குத் தெரியாமல் அமெரிக்காவில் அதிகம் நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
இதேபோல் இந்த விசா பாண்ட் கட்டணம் பங்களாதேஷ், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் சேர்ந்த அனைத்து B1 விசா, B2 விசா விண்ணப்பதாரர்களுக்கு பொருந்துமா என்றால் இல்லை. வழக்கம் போல் எல்லோரும் விசா விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விசா நேர்காணலுக்குச் செல்ல வேண்டும்.
விசா இண்டர்வியூவின் போது தூதரக அதிகாரிகள் விசா தொடர்பான விசாரணையில் இந்த கட்டணத்தைச் செலுத்தக் கூறுவார். இதேபோல் இக்கட்டணம் தேவையா இல்லையா என்பதை முடிவு செய்வதும் தூதரக அதிகாரி தான்.
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி விசா இண்டர்வியூவின் போது 10000 டாலர், 15000 டாலர் அல்லது 20000 டாலர் தொகையைச் செலுத்தக் கூறப்படலாம். தூதரக அதிகாரி விசா பாண்ட் தொகையைச் செலுத்தக் கோரினால் அதன் பின்பு I-352-ஐ சமர்ப்பிக்க வேண்டும். இதன் பின்பு அமெரிக்கக் கருவூல துறையின் ஆன்லைன் கட்டண தளமான Pay.gov மூலம் இத்தொகையைச் செலுத்த வேண்டும். அதுவரையில் இத்தொகையைச் செலுத்தக் கூடாது.


Click it and Unblock the Notifications
