அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் குறைந்தது.. தப்பித்தது இந்தியா..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலகின் வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா, கடந்த 7 மாதத்தில் மிகவும் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இது இந்நாட்டின் பொருளாதாரச் சரிவைக் குறைக்கும் ஒரு முக்கியக் காரணியாகும்.

இந்நிலையில் ஜூன் மாதம் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான முக்கியக் கூட்டத்தை நடத்துகிறது.

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் குறைந்தது.. தப்பித்தது இந்தியா..!

ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் குறைந்த அளவிலான வேலைவாய்ப்புகள் மட்டுமே அளித்துள்ளதால், பொருளாதார வளர்ச்சிக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு, இத்தகைய சூழ்நிலையில் பெடரல் வங்கி வட்டி உயர்வு முடிவை நிச்சயமாக ஒத்திவைக்கும். இதனால் இந்திய சந்தையில் இருந்து அமெரிக்க முதலீட்டாளர்களின் முதலீடுகள் வெளியேறாது.

ஏப்ரல் மாதத்தில் விவசாயம் அல்லாத துறையில் அமெரிக்காவில் 1,60,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 2016ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலகட்டத்தில் இதன் சராசரி அளவு 2,00,000 என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதத்தின் வேலைவாய்ப்பு அறிக்கையின் படி அமெரிக்காவில் தற்போது வேலையின்மையின் அளவு 5.0 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால் அடுத்தச் சில மாதங்களில் அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சியில் கணிசமான பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US job gains hit 7-month low

The US economy added the fewest number of jobs in seven months in April.
Story first published: Saturday, May 7, 2016, 17:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X