வேலையில்லா திண்டாட்டம் மேலும் குறைந்தது.. வலிமையான நிலையில் அமெரிக்கப் பொருளாதாரம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்விற்கு வலிமை சேர்க்கும் முக்கியக் காரணியாகக் கருதப்படும் யுஎஸ் ஜாப்ஸ் டேட்டா வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

 

சந்தை கணிப்புகளை விடவும் ஆகஸ்ட் மாதத்தில் குறைவான அளவில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டாலும், வேலையில்லா திண்டாட்டம் 7.5 வருட சரிவை எட்டி அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சிறப்பான வர்த்தக நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

7.5 வருட சரிவு..

7.5 வருட சரிவு..

அமெரிக்காவில் ஆக்ஸ்ட் மாத நிலவரத்தின் படி, வேலைவாய்ப்புகள் சந்தை கணிப்புகளை விடவும் குறைவாக இருந்தாலும், வேலையில்லா திண்டாட்டம் 5.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

மேலும் அனைத்து முக்கியமான துறைகளிலும் சம்பள உயர்வு நிலையான வேகத்தில் உள்ளது. இதன் மூலம் பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வு நடவடிக்கை உறுதியாகியுள்ளது.

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்

ஜூலை 2013ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில், உற்பத்தி துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் குறைந்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நான்-பார்ம் துறையில் வேலைவாய்ப்புகள் அளவு 1,73,000 ஆக உள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

மேலும் கடந்த சில மாதங்களாக அமெரிக்கச் சந்தையில் குறிப்பித்தக்க அளவிலான ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது. இதன் காரணமாகத் தான் 2015ஆம் ஆண்டின் ஜூலை மாத்தில் அமெரிக்காவின் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை 2,45,000 ஆக இருந்தது.

பெடரல் ரிசர்வ்
 

பெடரல் ரிசர்வ்

வேலைவாய்ப்புகள் குறித்த அறிக்கைகள் சிறப்பான உள்ளதால் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது கடன் பத்திரத்திற்கான வட்டி வகிதத்தை எவ்வித தடையும் இல்லாமல் அறிவிக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இதற்கான அறிவிப்புகளைப் பெடரல் வங்கி அறிவிக்கும்.

இந்தியா தயார்

இந்தியா தயார்

அமெரிக்காவின் வட்டி உயர்வின் மூலம் இந்திய பொருளாதாரம் அதிகளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகும் இதனைச் சமாளிக்க இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி போதுமான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக அறிவிப்புகள் கடந்த வாரம் வெளியானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US job growth slows, unemployment rate falls to 5.1 per cent

US payrolls rose less than expected in August, but a drop in the unemployment rate to a near 7-1/2-year low of 5.1 per cent and an acceleration in wages kept alive prospects of a Federal Reserve interest rate hike later this month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X